லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
தமிழ் சினிமாவில் பண்டிகை நாட்களில், விடுமுறை நாட்களில் படங்களை வெளியிடத்தான் பலரும் விரும்புவார்கள். கொரானோ இரண்டாவது அலை காரணமாக தியேட்டர்கள் நான்கு மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டு கடந்த மாதம் திறக்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளிவந்த 'லாபம், தலைவி' இரண்டு படங்களும் ரசிகர்களை ஏமாற்றியது. அடுத்து அக்டோபர் மாதம் ஆயுதபூஜை வர உள்ளது. அப்போது விஷால், ஆர்யா நடித்துள்ள 'எனிமி', ஆர்யா நடித்துள்ள 'அரண்மனை 3' ஆகிய படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய நாளில் மேலும் சில படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'டாக்டர்' படத்தை ஐந்து நாட்கள் முன்னதாக அக்டோபர் 9ம் தேதியே வெளியிடுகிறார்கள். இதன் மூலம் போட்டியைத் தவிர்க்க விரும்பி முன்னதாகவே வருகிறார் டாக்டர்.
மேலும் அக்டோபர் 9ம் தேதி சனிக்கிழமை வருகிறது. பொதுவாக படங்களை வெள்ளிக்கிழமைகளில்தான் வெளியிடுவார்கள். ஆனால், 'டாக்டர்' படத்தை சனிக்கிழமை வெளியிட தயாரிப்பாளர் கோட்டப்பாடி ராஜேஷின் சென்டிமென்ட்தான் காரணமாம். அவருக்கு 8ம் தேதி ஆகாதாம், 9ம் தேதிதான் ராசியாம். அதனால் 9ம் தேதி ரிலீஸ் என்கிறார்கள்.
அடுத்த மாதம் முதல் தியேட்டர்களில் 100 சதவீதம் அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சில பல பெரிய படங்களை அக்டோபரில் தயாரிப்பாளர்கள் வெளியிடுகிறார்கள்.