ஹீரோயின்களுக்கு முக்கியத்தும் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் : கார்த்திக் சுப்பராஜிற்கு பூஜா வேண்டுகோள் | போய் வா நண்பா…ஒரு நாளில் ஒரு மில்லியன்… | கேங்கர்ஸ் Vs சுமோ - ரசிகர்கள் ஆதரவு யாருக்கு? | 'குட் பேட் அக்லி' வினியோகஸ்தருக்கே 'ஜனநாயகன்' வினியோக உரிமை? | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அனுராதா | பிளாஷ்பேக்: இரட்டை சகோதரிகளாக நடித்த மாதுரி தேவி | ''பணம் கொட்டிக்கிடக்கு... எங்களுக்கு பணத்தாசை இல்லை'': ராயல்டி விவகாரத்தில் கங்கை அமரன் 'பளீச்' | புற்றுநோய் பாதிப்பு: உதவி கேட்கும் சூப்பர்குட் சுப்பிரமணி | தேங்கி கிடந்த 'சுமோ' ஏப்., 25ம் தேதி திரைக்கு வருகிறார் | பெல்ஜியம் கார் ரேஸ் : இரண்டாம் இடம் பிடித்த அஜித் அணி |
சமூக வலைத்தளங்களில் வடிவேலு நடித்த திரைப்படக் காட்சிகளை வைத்துத்தான் அதிகமான மீம்ஸ்கள் வருவது வழக்கம். கடந்த சில வாரங்களில் 'சார்பட்டா பரம்பரை' ஆர்யா, பசுபதி சைக்கிள் காட்சி மீம்ஸ்தான் அதிகமாக வலம் வந்தது.
ஆனால், கடந்த சில நாட்களில் விஜய் சேதுபதி மீம்ஸ்கள் தான் அதிகமாக வைரலாகி வருகிறது. கடந்த வாரம் விஜய் சேதுபதி நடித்த 'லாபம்' படம் தியேட்டர்களிலும், 'துக்ளக் தர்பார்' படம் டிவியிலும் வெளியானது. அடுத்து, நாளை 'அனபெல் சேதுபதி' படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
இவை தவிர விஜய் சேதுபதி டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கும் நிகழ்ச்சியும் வாரம் இரண்டு நாட்களில் ஒளிபரப்பாகி வருகிறது. தனது படங்களுக்கான பிரமோஷன் பேட்டிகள் என அவர் அளித்த பேட்டிகள் யு டியூபில் அதிகம் இருக்கிறது.
இப்படி எங்கு பார்த்தாலும் விஜய் சேதுபதியின் முகமே தெரிவதால் அதை வைத்து பல மீம்ஸ்களை மீம்ஸ் கிரியேட்டர்கள் உருவாக்கி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்கள். அவற்றிற்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. சினிமாவில் சாதாரண துணை நடிகராக இருந்து தனது முயற்சியின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு நல்ல இடத்திற்கு உயர்ந்தவர் விஜய் சேதுபதி.