ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள அனுஷ்கா 39 வயது ஆகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். ஆனால் அனுஷ்கா திருமணம் குறித்து தொடர்ந்து கிசுகிசுக்கள் வந்து கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் ரஜினி நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்ற சந்திரமுகி படத்தின் 2ஆம் பாகம் 'சந்திரமுகி 2' படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடிகர் ராகவா ராகவா லாரன்ஸ் வெளியிட்டார். இதை பி.வாசுவே இயக்குகிறார்.
ஆனால் அறிவிப்பு வெளியாகி ஒரு ஆண்டுக்கு மேலாகியும் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்நிலையில் இப்படத்தின் பணிகள் துவங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் நடிகை அனுஷ்கா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் இணைவதன் மூலம் சில ஆண்டுகள் கழித்து மீண்டும் அனுஷ்கா தமிழில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.