மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
கொரோனா வந்தாலும் வந்தது, அது பலருடைய வாழ்க்கையில் பெரும் புயலை வீசிவிட்டுச் சென்றது. ஆனால், சினிமாவைப் பொறுத்தவரையில் சர்ச்சைக்குரிய புதிய பாதை ஒன்றை திறந்துவிட்டுச் சென்றுவிட்டது.
ஓடிடியில் புதிய படங்கள் நேரடி வெளியீடு என்பது தான் அந்த புதிய பாதை. ஓடிடியில் வெளியாகும் அனைத்து படங்களும் பெரிய வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் சில பல முக்கிய படங்கள் ஓடிடியில் வெளியானது, தியேட்டர்காரர்களுக்கு எரிச்சலை உண்டாக்கியது. அந்தப் படங்கள் தியேட்டர்களில் வெளியாகியிருந்தால் நல்ல வசூலையும், லாபத்தையும் கொடுத்திருக்கும்.
இப்போது வாராவாரம் ஓடிடியில் புதிய படங்கள் வெளியாகி தியேட்டர்காரர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த வாரம் வெளியான 'தலைவி, லாபம்' ஆகிய படங்கள் வசூலைத் தரவில்லை. பல ஊர்களில் அப்படங்கள் இன்றே கடைசி என்கிறார்கள். அடுத்து நாளை 'கோடியில் ஒருவன், பிரண்ட்ஷிப்' ஆகிய படங்கள் தியேட்டர்களில் வெளியாக உள்ளன. இப்படங்களுக்கு எப்படிப்பட்ட வரவேற்பு கிடைக்கும் என்பது நாளைதான் தெரிய வரும்.
இதனிடையே, ஓடிடி தளங்களில் வாராவாரம் படங்கள் வர ஆரம்பித்துவிட்டது. கடந்த வாரம் 'டிக்கிலோனா' ஓடிடியிலும், 'துக்ளக் தர்பார்' முதலில் டிவி, மறுநாள் ஓடிடியிலும் வெளியாகியது. நாளை 'அனபெல் சேதுபதி' படம் ஓடிடியில் வெளியாக உள்ளது. அடுத்த வாரம் செப்டம்பர் 24ம் தேதி 'இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்' ஓடிடியில் வெளியாகிறது. தொடர்ந்து மூன்று வாரங்கள் ஓடிடியில் படங்கள் வருவது திரையுலகத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.