டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தமிழ், கன்னடம், மலையாளம், ஆகிய மூன்று மொழி படங்களில் நடித்து வருபவர் நடிகை பார்வதி நாயர். இவர், என்னை அறிந்தால், 'உத்தம வில்லன்', 'என்கிட்ட மோதாதே', 'நிமிர்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது வைபவ் நடிப்பில் உருவாகி வரும் 'ஆலம்பனா' படத்தில் நடித்து வருகிறார். இவரின் நடிப்புக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளதால் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.
சமூக நலனில் அக்கறைக் கொண்ட இவர், சமூகவலைதளங்களில் எப்போதும் தீவிரமாக இருப்பார். இந்நிலையில் 140 க்கும் மேற்பட்ட நாடுகளில் 3 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்டு இயங்கும் இந்த 'டோஸ்ட் மாஸ்டர்' தன்னார்வ தொண்டு நிறுவனம் இவரை பேச்சாளராக அழைத்திருந்தார்கள். அந்த விழாவில் நடிகை பார்வதி நாயரின் பேச்சு அனைவரின் புருவத்தையும் வியப்பில் உயர்த்தியது. விழாவின் இறுதியில் அவருக்கு 'டோஸ்ட் மாஸ்டர்' விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டது.




