இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடமையை செய் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் கார் விபத்தில் சிக்கிய யாஷிகா இடுப்பு, கால் பகுதிகளில் பலத்த அடிபட்டு, ஆபரேஷன் செய்து கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் எழுந்து நடக்க 6 மாதங்களாவது ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தனது உடல்நிலை பற்றி அவ்வப்போது சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகிறார் யாஷிகா.
இந்நிலையில் டுவிட்டரில் தற்போது தான் இருக்கும் நிலை குறித்து ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார் யாஷிகா. அதில் படுக்கையில் படுத்தப்படியாக இரு கால்களில் பெரிய கட்டுடன் உள்ளார். கொஞ்சம் கொஞ்சமாக உடல்நிலை தேறி வரும் யாஷிகா இந்த போட்டோவிற்கு கேப்ஷனாக எனது வலிமை என பதிவு செய்துள்ளார். சீக்கிரம் குணமாகி வர ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.