பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் எனப் பெயரெடுத்தவர் ஷங்கர். அவருடைய இயக்கத்தில் நடிக்க ஆசை என பல நடிகர்களும், நடிகைகளும் பேட்டி கொடுத்ததை பல முறை பார்த்திருக்கிறோம்.
தமிழில் முன்னணியில் இருக்கும் ஷங்கர் முதல் முறையாக தெலுங்கில் ராம்சரண் நடிக்க உள்ள படத்தை இயக்கப் போகிறார். இன்று இப்படத்தின் பூஜை ஐதராபாத்தில் நடைபெற்றது. படத்திற்கான முதல் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்கள்.
அந்த போஸ்டரில் படத்தின் நாயகன் ராம்சரண், நாயகி கியாரா அத்வானி, படத்தின் இயக்குனர் ஷங்கர், தயாரிப்பாளர் தில் ராஜு, இசையமைப்பாளர் தமன், மற்றொரு நாயகி அஞ்சலி, நடிகர்கள் ஜெயராம், சுனில் உள்ளிட்டோர் கோட், சூட் அணிந்து கொண்டு, பின்னணியில் ஆயிரக்கணக்கானோர் உடன் வர, கையில் பைல்களுடன் படிக்கட்டுகளில் ஏறுவது போன்ற போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள்.
இந்த போஸ்டரில் படத்தின் நாயகன் ராம்சரண் பெயர் தான் முதலில் இடம் பெற்றுள்ளது. அதற்குக் கீழேதான் இயக்குனர் ஷங்கர் பெயர் உள்ளது. ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற நடிகர்கள் நடிக்கும் படங்களில்தான் ஷங்கர் இப்படி தனது பெயரை இரண்டாவது வர சம்மதித்துள்ளார். மற்ற படங்களில் அவருடைய பெயர்தான் முதலில் இருக்கும். மேலும், 'ஷங்கரின்....' என்றுதான் படப் பெயரையும் குறிப்பிடுவார்கள்.
தெலுங்குத் திரையுலகத்தில் 'பாகுபலி' படத்தின் மூலம் பிரம்மாண்ட இயக்குனர் எனப் பெயரெடுத்த ராஜமவுலியின் 'பாகுபலி, ஆர்ஆர்ஆர்' பட விளம்பரங்களில் அவரது பெயருக்குத்தான் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், ஷங்கர் அந்த முன்னுரிமையை இந்தப் புதிய படத்தில் விட்டுக் கொடுத்துவிட்டார் என்றே தெரிகிறது. மேலும், இந்தப் படத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில் 'ஆர்சி 15, எஸ்விசி 50' என்றே குறிப்பிடுகிறார்கள்.
ஷங்கரின் இந்த மாற்றம் ஆச்சரியத்தைக் கொடுப்பதாக உள்ளதென கோலிவுட்டில் ஆச்சரியப்படுகிறார்கள்.