ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
மலையாள திரையுலகில் இருபது வருடங்களுக்கு முன்பு முன்னணி கதாநாயகிகளாக வலம் வந்தவர்கள் தான் மஞ்சுவாரியர், கீது மோகன்தாஸ், மற்றும் சம்யுக்தா வர்மா. இதில் கீது மோகன்தாஸ் ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவியை திருமணம் செய்து கொண்டபின் நடிப்பிலிருந்து ஒதுங்கினாலும், அப்படியே இயக்குனராக மாறிவிட்டார். நடிகை சம்யுக்தா வர்மாவும் நடிகர் பிஜுமேனனை திருமணம் செய்துகொண்ட கையோடு சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டார்.
மஞ்சுவாரியார் தற்போது தனது இரண்டாவது இன்னிங்ஸில் பிசியாக நடித்து வருகிறார். இருந்தாலும் இவர்கள் மூவரும் அவ்வப்போது ஒன்று கூடி அரட்டை அடிக்கவும் தங்களைப் பற்றிய தகவல்களை அப்டேட் செய்து கொள்ளவும் தவறுவதில்லை
அப்படி சமீபத்தில் சம்யுக்தா மேனன், கீது மோகன்தாஸ் இருவரையும் சந்தித்துள்ளார் மஞ்சுவாரியர். மூவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள மஞ்சுவாரியர், “எதையும் எதிர்கொள்ள நேர்ந்தாலும் எப்போதும் நண்பர்களே” என்று குறிப்பிட்டுள்ளார்