ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
நடிகர் சூர்யா தனது 2டி எண்டர்டெயின்ட்மென்ட் நிறுவனத்தின் சார்பில் பல படங்களை தயாரித்து வருகிறார். ஏற்கனவே தனது தம்பி கார்த்தியை வைத்து 'கடைக்குட்டி சிங்கம்' என்ற வெற்றி படத்தை தயாரித்தார். இப்போது மீண்டும் அவரை வைத்து ஒரு படத்தை தயாரிக்கிறார். இதை கார்த்தியை வைத்து கொம்பன் படத்தை இயக்கிய முத்தையா இயக்குகிறார். மேலும் கொம்பன் படத்தில் நடித்த ராஜ்கிரணும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், சூரி, அதிதி(அறிமுகம்) மற்றும் பலர் நடிக்கின்றார்கள்.
இப்படமும் கிராமத்து பின்னணியில், உறவுகளின் கதையை சொல்லும் குடும்ப திரைப்படமாக உருவாகவுள்ளது. படத்திற்கு “விருமன்” என்று பெயரிட்டுள்ளனர். இப்படம் மூலம், இயக்குநர் முத்தையா உடன் முதன் முறையாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இணைகிறார். 'மாநகரம்' மற்றும் பல ஹிட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த S.K.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். அனல் அரசு ஸ்டன்ட் காட்சிகளை அமைக்கின்றார். இப்படத்தின் பூஜை திங்கள்கிழமை நடைபெறுகிறது. செப்டம்பர் 18 ஆம் தேதி தேனியில் படப்பிடிப்பு துவங்குகிறது.