ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தெலுங்குத் திரையுலகத்தில் போதைப் பொருள் பயன்பாடு குறித்து 2017ல் எழுந்த சர்ச்சை, விசாரணை வளையத்தில் 12 சினிமா பிரபலங்கள் சிக்கியுள்ளனர். அவர்களை அடுத்தடுத்து அமலாக்கப் பிரிவினர் விசாரணைக்கு அழைத்து விசாரித்து வருகின்றனர்.
இயக்குனர் பூரி ஜெகன்னாத், நடிகை சார்மி ஆகியோரைத் தொடர்ந்து நேற்று நடிகை ரகுல் ப்ரீத் சிங் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் 6 மணி நேரங்களுக்கும் மேலாக விசாரணை நடந்துள்ளது. அப்போது அவரிடம் 30 கேள்விகளை அமலாக்கப் பிரிவினர் கேட்டுள்ளனர்.
ரகுல் ப்ரீத் சிங், எப்-45 என்ற ஜிம் ஒன்றை நடத்தி வருகிறாராம். அந்த ஜிம்முக்கும் போதைப் பொருள் வழக்கியில் சிக்கியுள்ள முக்கிய குற்றவாளியான கால்வின் என்பவருக்கும் இடையே பணப்பரிவர்த்தனை நடந்துள்ளதாம். மேலும், எப்-கிளப் என்ற இடத்தில் நடைபெற்ற ஒரு பார்ட்டியில் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். அந்த பார்ட்டியில் கால்வின் போதைப் பொருளை சப்ளை செய்தது குறித்த சிசிடிவி வீடியோ ஆதாரங்களுடன் தான் ரகுல் ப்ரீத் விசாரணைக்கு அழைக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.
கடந்த சில நாட்களாக நடந்து வரும் இந்த விசாரணை விவகாரத்தில் தெலுங்குத் திரையுலகத்தில் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் மேலும் சில பிரபலங்கள் விசாரிக்கப்பட உள்ளனர்.