'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் | ‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் |
ஒரு திரைப்படம் தியேட்டர்களில் வெளியானால் 4 வாரங்களுக்கு பிறகே ஓடிடி தளத்திலோ, அல்லது தொலைக்காட்சியிலோ வெளியிட வேண்டும். ஓடிடியில் வெளியாகும் படங்களை மீண்டும் தியேட்டரில் வெளியிட மாட்டோம் என்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் வருகிற 10ந் தேதி வெளியாக இருக்கும் தலைவி படம் தியேட்டரில் வெளியிடப்பட்டு 2 வாரத்தில் ஓடிடி தளத்திற்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு 4 வாரத்திற்கு பிறகு ஓடிடி தளத்தில் வெளியிட தலைவி படத் தயாரிப்பாளர் ஒத்துக் கொண்டதால் இந்த பிரச்சினை தீர்த்து வைக்கப்பட்டு படம் அறிவித்தபடி வெளியாகிறது.
2 வாரத்தில் ஓடிடி வெளியீடு என்கிற ஒப்பந்தத்திற்காக கணிசமான தொகை கொடுத்திருந்த ஓடிடி நிறுவனம் அது 4 வாரமாக நீட்டிக்ப்பட்டதால் பல கோடி ரூபாயை குறைத்து விட்டதாம், என்றாலும் அந்த இழப்பை தியேட்டர் வசூலில் சரிகட்டி விடலாம் என்று தயாரிப்பு தரப்பு நம்புகிறது.
இதேபோன்று பல படங்கள் இரண்டு வாரத்தில் ஓடிடி வெளியீடு என்று ஒப்பந்தம் செய்திருக்கின்றன. அவைகளும் ஓடிடி நிறுவனத்திடமிருந்து பெற்றிருந்த பணத்தை கணிசமாக திருப்பி கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறது.
ஓடிடி நிறுவனங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியிட்டால் ஒரு தொகை, தியேட்டரில் வெளியிட்டு விட்டு 2 வாரத்தில் வெளியிட்டால் ஒரு தொகை 4 வாரத்தில் வெளியிட்டால் ஒரு தொகை, தொலைக்காட்சியில் ஒளிபரப்பி விட்டு வெளியிட்டால் ஒரு தொகை என்று வகைப்படுத்தி வைத்திருக்கிறதாம். இதனால் படத்தை ஓடிடியில் வெளியிடலாமா, தியேட்டரில் வெளியிடலாமா என்ற குழப்பத்தில் பல தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள்.