இட்லி கடை, காந்தாரா சாப்டர் 1 படங்களின் வசூல் நிலவரம் என்ன? | நயன்தாராவின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்றிய ரச்சிதா ராம் | கந்தன் மலை படத்தின், கந்தன் மலையை தொட்டுப்பாரு பாடல் வெளியானது | 'டியூட்' வினியோக நிறுவனம் மாறியது ? | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' நவம்பர் 7 வெளியீடு | 'பாகுபலி எபிக்' ரிலீஸ் : ஓடிடியில் தூக்கப்பட்ட 'பாகுபலி 1, 2' | ரவி மோகன் நடிக்கும் 'ப்ரோ கோட்' படத் தலைப்பு வழக்கு : நீதிமன்றம் உத்தரவு | ரஜினி, ஸ்ரீதேவி மாதிரி பிரதீப் ரங்கநாதன், மமிதா : டியூட் பட இயக்குனர் பேட்டி | அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் |
தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் வெளியாகும் சூப்பர் ஹிட் படங்களைத் தவறவிடும் ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் விதமாக, ஓடிடியில் அந்த திரைப்படங்கள் வெளியிடப்படுகிறது. அந்த வகையில் இந்தவாரம் சற்று கூடுதல் ஸ்பெஷலாக ரசிகர்கள் எதிர்பார்த்த பல்வேறு படங்கள் தற்போது ஸ்டிரீம் ஆக உள்ளது. அந்த வகையில் இந்த வார ஓடிடி ரிலீஸ் குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.
மதராஸி
நடிகர் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், வித்யுத், விக்ராந்த், உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடிக்க, இயக்குநர் முருகதாஸ் இயக்கிய திரைப்படம் 'மதராஸி'. உளவியல் திரில் ஆக் ஷன் படமாக உருவான இந்த திரைப்படம் செப்.5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரூ.100 கோடி வசூல் செய்தது. ரகிசகர்கள் மத்தியில் கலவையான வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படம் நேற்று முன்தினம்(அக்.1ம் தேதி) அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
காந்தி கண்ணாடி
விஜய் டிவி புகழ் கேபிஓய் பாலா நாயகனாக அறிமுகமான திரைப்படம் 'காந்தி கண்ணாடி'. இயக்குநர் பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்து இருந்தனர். ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படம் நேற்று முன்தினம் (அக்.1ம் தேதி) அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது.
லிட்டில் ஹார்ட்ஸ்
மவுலி தனுஜ் பிரசாந்த், சிவானி நகராம் நடிப்பில் தெலுங்கில் வெளியான திரைப்படம் 'லிட்டில் ஹார்ட்ஸ்'. காமெடி கலந்த ரொமான்டிக் படமான இந்த திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பிளாக் பஸ்டர் திரைப்படமாக அமைந்தது. இந்த திரைப்படம் நேற்று முன்தினம்(அக்.1ம் தேதி) ஈடிவி வின் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
தி கேம்: யூ நெவர் ப்ளே அலோன்
நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில், ராஜேஷ் எம். செல்வா இயக்கத்தில் வெளியான தொடர் 'தி.கேம் : யூ நெவர் ப்ளே அலோன்'. திரில்லர் கதையுடன் வெளியாகியுள்ள உள்ள இந்த வெப் தொடர் நேற்று (அக்.2ம் தேதி) முதல் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
சாகசம்
பிபின் கிருஷ்ணா இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான திரைப்படம் 'சாகசம்'. நாராயண், கவுரி பி.கிஷன், பாபு அந்தோணி உள்ளிட்ட பலர் நடிப்பில் காமெடி அட்வென்சர் திரைப்படமாகக் கடந்த செப்.8ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. இந்த திரைப்படம் தற்போது நேற்று முன்தினம் முதல் (அக்.1ம் தேதி) சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.