மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
தமிழ் சினிமாவில் படப்பிடிப்பை வேற்றுக் கிரகத்தில் சென்று ரகசியமாக படப்பிடிப்பு நடத்தினால் கூட நமது ரசிகர்கள் அவர்கள் பின்னே சென்று புகைப்படங்களை எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் பரவவிட்டு விடுவார்கள்.
வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் வலிமை படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் சில நாட்கள் நடைபெற்றது. அங்கு பைக் சேசிங் காட்சி ஒன்று எடுக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள். அது உண்மைதானா என்பது படம் வந்தால் தெரிந்துவிடும். அங்கு படப்பிடிப்பு முடிந்து படக்குழுவினர் திரும்பி விட்டதாகவும் ஒரு தகவல். ரஷ்யாவில் படப்பிடிப்பு நடந்த போது அங்கு நடைபெற்ற சில படப்பிடிப்புப் புகைப்படங்கள், அஜித் சென்ற சில இடங்களின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பரவச் செய்து வருகிறார்கள்.
![]() |
பனி மலையில் புலி பாய்ச்சல்
ரஷ்யாவிற்கு படக்குழுவினர் செல்வதற்கு ஒரு வாரத்துக்கு முன்பாக அஜித் ரஷ்யா சென்று விட்டார். அங்கு அவர் ஒரு வாரம் பனிமலை பைக் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் 5 ஆயிரத்து 800 கிலோமீட்டர் தூரம் கொண்ட பைக் பயணத்தை முடித்திருக்கிறார். இதில் சுமார் 2 ஆயிரம் கிலோ மீட்டர் வரை பனிமலை பயணமாகும். அதற்கென வடிவமைக்கப்பட்ட பைக்கில் அவர் சென்றிருக்கிறார். அந்த பயணத்தில் எடுக்கப்பட்ட சில படங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.
வலிமை படத்தின் ஒரு சிங்கிள் மட்டும் வெளிவந்த நிலையில் அடுத்த சிங்கிள்களும், தொடர்ந்து படமும் எப்போது வெளியாகும் என அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.