டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

போதைப் பொருள் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தெலுங்குத் திரையுலக பிரபலங்கள் சிலரை அமலாக்கப் பிரிவு கடந்த இரண்டு நாட்களாக விசாரித்து வருகிறது. இரு தினங்களுக்கு முன்பு தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்னாத் விசாரிக்கப்பட்டார். அவரிடம் கடந்த ஐந்து வருடங்களுக்கான வங்கிப் பரிவர்த்தனை விவரங்களை அமலாக்கத் துறையினர் பெற்றனர். நேற்று பூரி ஜெகன்னாத்தின் பிஸினஸ் பார்ட்னரும், நடிகையுமான சார்மி விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் 8 மணி நேரங்கள் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் இன்று(செப்., 3) தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங் ஐதராபாத்தில் உள்ள அமலாக்க துறை அலுவலகத்தில் ஆஜராகி உள்ளார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. ரகுல் நேரில் ஆஜரான வீடியோ வெளியாகி உள்ளது. இவரை தொடர்ந்து பாகுபலி புகழ் நடிகர் ராணா டகுபட்டி செப்டம்பர் 6ம் தேதி ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்பு மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கில் போதைப் பொருள் விவகாரத்தில் மும்பை அமலாக்கப் பிரிவு முன்பு ரகுல் ப்ரீத் ஆஜராகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்குத் திரையுலகத்தைச் சேர்ந்த 12 சினிமா பிரபலங்கள் விசாரணை வளையத்தில் உள்ளனர்.




