மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
இயக்குனர் மணித்னம் 'பொன்னியின் செல்வன்' படத்தைத் தற்போது இயக்கி வருகிறார். சரித்திரக் கதை என்பதால் இப்படத்தில் குதிரை, யானை உள்ளிட்ட விலங்குகள் பயன்படுத்தப்பட்டு படமாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பில் குதிரை ஒன்று இறந்ததற்கு பீட்டா இந்தியா அமைப்பு மணிரத்னம் மீது ஐதராபாத்தில் உள்ள அப்துல்லபுர்மேட் காவல் நிலையத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளது.
ஆகஸ்ட் 11ம் தேதியன்று நடைபெற்ற படப்பிடிப்பில் நடைபெற்ற விபத்தில் ஒரு குதிரை இறந்ததாக ஆகஸ்ட் 18ம் தேதியன்று எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தெலங்கானா மாநில விலங்குகள் நலவாரியம், ஐதராபாத் மாவட்ட கலெக்டர் ஆகியோர் விசாரிக்க வேண்டும் என இந்திய விலங்குகள் நல வாரியமும் உத்தரவிட்டுள்ளது.
அந்த விபத்து பற்றிய வீடியோ அல்லது போட்டோ பதிவை யாராவது அளித்தால் அவர்களுக்கு 25000 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்றும் பீட்டா இந்தியா அறிவித்துள்ளது.
சினிமா இயக்குனர்கள் நிஜ விலங்குகளை பயன்படுத்தாமல் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் விலங்குகளைப் பயன்படுத்த வேண்டும், இந்தக் கொடுமையை மணிரத்னம் நிறுத்திவிட்டு கிராபிக்சை பயன்படுத்த வேண்டும், என்றும் பீட்டா இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.
இயக்குனர் மணிரத்னத்திற்கு எதிராக பீட்டா இந்தியா அளித்துள்ள இந்தப் புகார் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.