ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரிப்பாளர் முருகானந்தம் தயாரிக்கும் படம் 'பிசாசு 2'. கதையின் நாயகியாக ஆண்ட்ரியா நடிக்க உடன் பூர்ணா, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். மிஷ்கின் இயக்கி உள்ளார்.
திண்டுக்கல்லில் 3 கட்டமாக நடைபெற்ற 'பிசாசு 2' படப்பிடிப்பு நேற்று நிறைவடைந்தது. படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து இயக்குனர் மிஷ்கின் அனைவரின் ஒத்துழைப்பிற்கு தனது அன்பை தெரிவித்து வாழ்த்துக்களை கூறினார். கார்த்திக் ராஜா இசையமைக்க, சிவா சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். விரைவில் படத்தின் இசை வெளியீடும், படம் தியேட்டரில் வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.