'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் உள்ள கன்னட நடிகையான சோனியா அகர்வாலின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் போதை பொருள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 40 கிராம் கஞ்சா, 12 மது பாட்டில்கள் சிக்கின.
சமூக வலைத்தளங்களில், தமிழ் படங்களில் நடித்தவரும், செல்வராகவனின் முன்னாள் மனைவியுமான நடிகை சோனியா அகர்வால் வீட்டில் போதை பொருள் சோதனை நடந்ததாக தகவல் பரவியது. சமூக வலைத்தளங்களில் சோனியா அகர்வாலின் படத்துடன் இந்த தகவல் வைரல் ஆனது.
இந்த நிலையில் நான் அவளில்லை. என் மீது அவதூறு பரப்பியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியுள்ளார் சோனியா அகர்வால். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: என்ன நடந்தது என்று தெரியாமலே, கிடைத்த தகவலை உறுதி செய்யாமலேயே பகிர்ந்து விடுகிறார்கள். பொதுவாக சமூக வலைதள வதந்திகளைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை என்றாலும் இது மிகவும் தீவிரமான ஒரு விஷயம். குறைந்தபட்சம் என்னை அழைத்தாவது உறுதி செய்திருக்க வேண்டும்.
என் மீது அவதூறு பரப்பியதற்காவும், தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் மூலம் எனக்கும் என் குடும்பத்துக்கும் மன உளைச்சல் மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதற்காவும் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க இருக்கிறேன், என்கிறார் சோனியா அகர்வால்.