2024 தேசிய விருதுகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீடு | 'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் |
விஜய்சேதுபதியின் படங்கள் தொடர்ச்சியாக டிவியிலும், ஓடிடி தளத்திலும் வெளியாவது தியேட்டர் அதிபர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் ஓடிடியில் வெளியாகும் விஜய்சேதுபதி படங்களின் பட்டியலில் இருந்து கடைசி விவசாயி விலகிக் கொண்டுள்ளது.
சோனி லைவ் தளத்தில் படத்தை வெளியிட பேச்சு நடந்து வந்துதது. தற்போது தியேட்டர்கள் திறக்கப்பட்டு விட்டதாலும், விஜய்சேதுபதி இந்த படத்தை தியேட்டரில் வெளியிட விரும்பியதாலும் அந்த முயற்சி கைவிடப்பட்டு இந்த மாதம் தியேட்டரில் வெளியாகிறது.
காக்கமுட்டை திரைப்படம் மூலமாக கவனம் ஈர்த்தவர் மணிகண்டன். அதன் பின்னர் குற்றமே தண்டனை மற்றும் ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களை இயக்கினார். இந்நிலையில் விஜய் சேதுபதியை முக்கிய கதாபாத்திரமாக வைத்து இயக்கியுள்ள படம் கடைசி விவசாயி. இந்தப் படத்தின் நாயகனாக முதியவர் நல்லாண்டி நடித்துள்ளார். அவருடன் விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.