'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 5 பற்றிய முதல் அறிவிப்பு இன்று(ஆக.,31) மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது. அறிவிப்புக்கு ஒரு அறிவிப்பாக இன்று வீடியோ டீசரை வெளியிட உள்ளார்கள்.
கடந்த வருடம் சீசன் அக்டோபர் மாதம் 4ம் தேதி ஆரம்பமாகி ஜனவரி 17ம் தேதி வரை நடந்தது. அது போலவே இந்த வருட சீசனும் அக்டோபர் மாதம் தான் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.
கமல்ஹாசன் தற்போது 'விக்ரம்' படத்தில் நடித்து வருகிறார். இன்னும் ஒரு மாதத்திற்குள் அப்படத்தின் பெரும்பாலான வெளிப்புறக் காட்சிகளை முடித்துவிட திட்டமிட்டுள்ளார்களாம். அதற்குப் பிறகு ஸ்டுடியோ சம்பந்தப்பட்ட காட்சிகளை பிக்பாஸ் 5 படப்பிடிப்பு நடக்கும் அதே இவிபி ஸ்டுடியோவில் செட் அமைத்து படமாக்க உள்ளார்களாம்.
பிக்பாஸ் 5 நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க வசதியாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்டுவிட்டது என்றே தெரிகிறது.
இந்த 5வது சீசன் முந்தைய 4 சீசன்களை விடவும் முற்றிலும் மாறுபட்டு இருக்க வேண்டுமென தயாரிப்புக் குழுவும், விஜய் டிவி குழுவும் முடிவு செய்துள்ளதாம். அனேகமாக இதுதான் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் கடைசி பிக் பாஸ் சீசனாக இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.