'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
தெலுங்கில் 'சாகுந்தலம்' படத்தில் நடித்து முடித்த சமந்தா, தமிழில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் நடித்து வருகிறார். கடந்த சில வாரங்களாக சமந்தாவுக்கும், அவரது காதல் கணவர் நாகசைதன்யாவிற்கும் இடையே திருமண வாழ்க்கையில் பிரச்சினை என டோலிவுட்டிலிருந்து தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இருப்பினும் இரு தினங்களுக்கு முன்பு தனது மாமனார் நடிகர் நாகார்ஜுனாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தார். ஆனால், மருமகள் சமந்தாவின் வாழ்த்திற்கு மாமனார் நாகார்ஜுனா இதுவரை நன்றி தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிட வேண்டியது.
இதனிடையே, தனது நெருங்கிய தோழி ஷில்பா ரெட்டி என்பவருடன் தெலங்கானா மாநில கிராமப்புறங்களில் சுற்றுலா சென்றுள்ளார். தோழியின் மகனுடன் ஒரு குளம் அருகே எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமந்தா பகிர்ந்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக அவரது கணவர் நாகசைதன்யாவுடன் இருக்கும் எந்த புகைப்படத்தையும் அவர் சமூக வலைத்தளங்களில் பகிரவில்லை.
இருப்பினும் தன்னைப் பற்றிய வதந்திகளுக்கும், டிரோல்களுக்கும் பதிலடி கொடுக்கும் விதமாக 'டிரோல்கள்' பற்றி ஆடம் கிரான்ட் என்ற அமெரிக்க சைக்காலஜிஸ்ட் பகிர்ந்த ஒரு பதிவைப் பதிவிட்டுள்ளார்.