'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி கதாநாயகனாகத்தான் மட்டுமே நடிப்பேன் என அடம் பிடிக்கவில்லை. விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தில் வில்லனாக நடித்தார். தெலுங்கில் புதுமுகங்கள் நடித்த 'உப்பெனா' படத்தில் வில்லனாக நடித்தார். இப்போது கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' படத்திலும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இருந்தாலும் ஒரு முன்னணி நடிகராக இருப்பவர் எந்தவித மோதலும் இல்லாமல் சீரான, சரியான இடைவெளியில் அவரது படங்களை வெளியிட வைப்பார். அந்த விதத்தில் விஜய் சேதுபதி பெரும் குழப்பத்தை அவரது ரசிகர்களுக்கு மட்டுமல்ல, திரையுலகத்திற்கும் ஏற்படுத்தி வருகிறார்.
அவர் நடித்துள்ள 'லாபம், துக்ளக் தர்பார், அனபெல் சேதுபதி' ஆகிய படங்கள் தியேட்டர், டிவி, ஓடிடி என அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இந்த மூன்று படங்களைக் கழித்துவிட்டால் அவர் கைவசம் மேலும் 10 படங்கள் உள்ளதாம்.
அவர் நடித்து முடித்து அடுத்து வெளிவர வேண்டிய படங்கள் 'மாமனிதன், கடைசி விவசாயி, யாதும் ஊரே யாவரும் கேளிர், இடம் பொருள் ஏவல்,'. இவை தியேட்டர் வெளியீடா அல்லது ஓடிடி, டிவி வெளியீடா என்பது சீக்கிரமே தெரிய வரும். இந்தப் படங்கள் சில பல வருடங்களாகவே வெளிச்சத்திற்காகக் காத்திருக்கின்றன.
இதற்குப் பிறகு 'காத்து வாக்குல ரெண்டு காதல், பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் 46வது படம், விக்ரம், மும்பைகர் (ஹிந்தி), காந்தி டாக்ஸ், மெர்ரி கிறிஸ்துமஸ், 19 (1), மைக்கேல், ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இவையில்லாமல் 'த பேமிலிமேன்' இயக்குனர்கள் ராஜ், டீகே இயக்கத்தில் வெப் தொடர் ஒன்றில் நடித்து வருகிறார். இவற்றோடு சில படங்களில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவும் சம்மதித்திருக்கிறார்.
இதையெல்லாம் விடவும் அவரைத் தேடி இன்னும் பல வாய்ப்புகள் போய்க் கொண்டிருக்கிறதாம். சில பல படங்களைத் தயாரித்து நஷ்டமந்த காரணத்தால்தான் வரும் படங்களை எல்லாம் ஓரளவிற்குப் பிடித்திருந்தாலும் அட்வான்ஸ் வாங்கி போட்டுக் கொண்டு நடிக்க சம்மதிக்கிறார் என கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.