பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி |
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் வடிவேலு. தற்போது அவர் சினிமாவில் இருந்து விலகி உள்ளார். இம்சை அரசன் 24-ம் புலிகேசி படம் தொடர்பாக எழுந்த சர்ச்சையில் அவர் புதிய படங்களில் நடிக்க தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்ததால் அவர் படங்களில் நடிக்காமல் இருந்தார். தற்போது அந்த பிரச்சினை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட்டுள்ளது. அதையடுத்து வடிவேலு மீண்டும் படங்களில் நடிக்கத் தயாராகி உள்ளார். இந்நிலையில் தற்போது வடிவேலு நடிக்க இருக்கும் முதல் படமான நாய் சேகர் படத்தின் தலைப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
காமெடி நடிகர் சதிஷ் மற்றும் குக் வித் கோமாளி பவித்ரா நடிப்பில் புதிய படம் உருவாகி உள்ளது. அந்தப் படத்தை கிஷோர் ராஜ்குமார் என்பவர் இயக்க உள்ளார். அந்தப் படத்திற்கும் நாய் சேகர் என்று தான் தலைப்பு வைத்துள்ளார்களாம். படப்பிடிப்பை முழுமையாக முடித்துவிட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை வெளியிடும் போது படத்தின் தலைப்பை வெளியிடலாம் என்று திட்டமிட்டு இருந்தனனர். ஆனால் வடிவேலு தன்னுடைய அடுத்த படம் நாய்சேகர் என்று வடிவேலு கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாய் சேகர் என்ற தலைப்பை அந்த நிறுவனம் பதிவு செய்திருக்கின்றனர். எனவே வடிவேலு, அந்தப் பெயரை என் படத்துக்காக விட்டுக்கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார். ஆனால், அந்தப் படத்தின் கதைப்படி தலைப்பு மிக முக்கியமாக இருப்பதால் மறுத்து விட்டார்களாம். படத்தில் ஒரு நாய் முக்கியக் கதாபாத்திரத்தில் இருப்பதால் படத்தின் தலைப்பு அவசியம் என்று சொல்லியிருக்கிறார்கள்.