ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
இன்றைய தேதியில் அதிக படங்களில் நடித்து வருபவர் நடிகர் விஜய்சேதுபதிதான். அவரது படங்கள் சில ரிலீசுக்கு தயாராகியும் கூட கொரோனா தாக்கம் காரணமாக தள்ளிப்போய்க்கொண்டு இருந்தது. இந்தநிலையில் கொரோனா தாக்கம் குறைந்து, தியேட்டர்கள் திறக்கப்பட்ட நிலையில் அவரது படங்கள் வரிசையாக ரிலீஸுக்கு தயாராக இருக்கின்றன.
எஸ்.பி.ஜனநாதன் டைரக்சனில் விஜய்சேதுபதி நடித்துள்ள லாபம் படம் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டமாக வரும் செப்.,9-ம் தேதி தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது.
இந்தநிலையில் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள இன்னொரு படமான துக்ளக் தர்பார் படத்தை வரும் செப்.,10-ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகையன்று நேரடியாக தொலைக்காட்சியிலேயே ஒளிபரப்பாக இருக்கிறது. டெல்லிபிரசாத் தீனதயாளன் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் பார்த்திபன், ராசி கன்னா, மஞ்சிமா மோகன் ஆகியோர் நடித்துள்ளனர்.
விஜய்சேதுபதியின் இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் தியேட்டர்களில் வெளியாவதாக இருந்தால் தான், ஏதோ ஒரு படத்திற்கோ அல்லது இரண்டிற்குமோ வசூல் ரீதியாக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆனால் ஒன்று தியேட்டரிலும் மற்றொன்று டிவியிலும் வெளியாவதால், தியேட்டரில் வெளியாகும் படத்திற்கு எந்த பாதிப்பும் வராது என்றே தெரிகிறது.