ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
இம்சை அரசன் 24ம் புலிகேசி படம் விவகாரம் தொடர்பாக நடிகர் வடிவேலு - இயக்குனர் ஷங்கர் இடையேயான பிரச்னை பேச்சுவார்த்தை மூலம் சுமூகத் தீர்வு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் மீண்டும் நடிக்க தடை விலகியுள்ளது ரசிகர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது.
இதுப்பற்றி வடிவேலு அளித்த ஒரு பேட்டியில், ‛‛இது எனக்கு மறுபிறவி. மீண்டும் சினிமாவில் நான் தோன்றப் போவது முதன் முதலில் நான் வாய்ப்பு தேடும் போது ஏற்பட்ட உணர்வு ஏற்பட்டுள்ளது. சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் படத்தில் நடிக்கிறேன். இதை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. லைகா சுபாஷ்கரன் மூலம் எனக்கு மறுவாழ்வு ஏற்பட்டுள்ளது. லைகா நிறுவனத்திற்கு 5 படங்கள் நடிப்பேன். ஏன் 10 படங்களில் கூட நடிப்பேன். என் ரசிகர்கள் ஒவ்வொரு வீட்டிலும் ரசிகர் மன்றம் வைத்துள்ளார்கள். முதல்வரை சந்தித்ததும் எனக்கு நல்ல காலம் பிறந்தது'' என்றார்.