பிளாஷ்பேக்: வெற்றி பெற்ற “வேலைக்காரி”யும் வீழ்ச்சி அடைந்த “விஜயகுமாரி”யும் | நடிகையுடன் திருமணமா? தூக்கத்தை தொலைத்த ஸ்டாலின் முத்து | திட்டினால் திட்டட்டும் - ஷகிலாவின் சர்ச்சை பேச்சு | காதல் பிரிவில் தமன்னா - விஜய் வர்மா | சாகும் வரை நான் 'சீதா' தான் - 'ராமாயண்' தீபிகா | 'லேடி சூப்பர் ஸ்டார்' பட்டத்தை துறந்த நடிகை நயன்தாரா | போதைப்பொருளாக மாறிய குளுக்கோஸ் ; படப்பிடிப்பில் அவதிப்பட்ட வில்லன் டீம் | மோகன்லாலுடன் நடிப்பதற்காகவே கிளம்பி வந்த ஒடிசா இளைஞர் ; லட்சியம் நிறைவேறியது | பிரபல பின்னணி பாடகி கல்பனா தற்கொலை முயற்சி | கமல்ஹாசன் உடன் இணைந்து நடிக்க ஆசைப்படும் மிருணாள் தாகூர் |
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த வடிவேலு, கடந்த சில ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்து வந்தார். இயக்குனர் ஷங்கருடனான பிரச்னைகள் ஒருபக்கம் ஓடிக்கொண்டிருந்தாலும், ஹீரோவாக நடிக்க சில பட வாய்ப்பு வந்தாலும், அதனை ஒப்புக்கொள்ளவில்லை. இந்த கொரோனா காலக்கட்டத்தில் 20க்கும் மேற்பட்ட கதைகள் கேட்டு, அதில் 10 கதைகளை வரிசைப்படுத்தி வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
இதில், சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் என்ற படம் மட்டும் முதலில் துவங்க இருப்பதாக தெரிகிறது. ஆடி மாதம் முடிவடைந்ததும், இதற்கான அறிவிப்பு வெளியாகலாம். இது குறித்து வடிவேலுவிடம் கேட்டபோது, நிறைய கதைகளில் என்னிடம் கேட்டார்கள். அதில் 10 கதைகளை ஓகே செய்து வைத்திருக்கிறேன். வரிசையாக தொடர் அறிவிப்புகள் வரும். ரசிகர்கள் இனி தொடர்ந்து என்னை திரையில் பார்க்கலாம், என்றார்.