ஜூலை 25ல் ‛அவதார் 3' டிரைலர் | இசை நிகழ்ச்சி! கெனிஷா உடன் இலங்கை சென்ற ரவி மோகன் | ‛பராசக்தி' படத்தில் இணைந்த ராணா | வார் 2 படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | மாரி செல்வராஜின் 'பைசன்' பிஸினஸ் எப்படி? | இறுதிக்கட்டத்தை எட்டிய ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் படம் | இலங்கை தமிழ் படத்தில் டி.ஜே.பானு | புராண அனிமேஷன் படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | வசூலை குவிக்க அடுத்து வருகிறது 'ட்ரான்: ஏரிஸ்' | அனிருத் இசை நிகழ்ச்சி திடீர் ரத்து |
நாங்க வேற மாறி, வேற மாறி, வேற மாறி... எல்லா நாளுமே நல்ல நாளு தான்... எல்லா நேரமும் நல்ல நேரம் தான்... தகதகன்னு மின்னலாம் தென்னாவட்டா துள்ளலாம்... வளவளன்னு பேசாமா வேலையை பார்த்தா... என மதுரையின் பின்னணியில் உருவான வலிமை பாடலில் இறங்கி அடிக்கும் இசையால் அஜித் ரசிகர்களை வேற மாதிரி தெறிக்கவிட்ட இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உடன் இன்னிசை பேட்டி...
அஜித், நீங்கள் இணையும் பாடல்களின் வெற்றி ரகசியம்?
இதை பெரிய வளர்ச்சியாக நான் பார்க்கிறேன்... அரவிந்தன் படத்தில் ஆரம்பித்து 25 ஆண்டுகள் இசை பயணம் மிகவும் அருமை. மக்களுடன் இசையாலே இணைந்திருப்பதில் எனக்கு ரொம்ப சந்தோஷம்.
அப்பா இளையராஜா உடன் பணியாற்றும் அனுபவங்கள்?
அவர் ஸ்டுடியோவில் உள்ளே வரும் போது ஒரு பாடகராக தான் வருவார். திட்டலாம் மாட்டார், ஆனால் அவரை பார்த்தால் ஒரு பதட்டம் இருக்கும்.
அப்பாவை போல திருவாசகம் பண்ண ஆசை இருக்கா?
கண்டிப்பாக வாய்ப்பு கிடைத்தால் பண்ணுவேன், அதுக்கு பெரிய உழைப்பு இருக்கு.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு, இசை?
மாநாடு ரசிகர்களுக்கு ஒரு பெரிய விருந்தாக இருக்கும். சிம்பு சும்மா நடிப்பில் கலக்கியிருக்கிறார். அடுத்து மா மனிதன் ரிலீஸ்காக காத்திருக்கோம். அதுவும் ஒரு படைப்பு.
உங்க தயாரிப்பில் பியார் பிரேமா காதல்க்கு பின் அடுத்த படம்?
அடுத்த படம் குறித்து ஆலோசனைகள் நடக்கிறது, பேசிட்டு இருக்கோம்.
அஜித் வலிமைல் விக்னேஷ் சிவனின் நாங்க வேற மாதிரி பாடல்?
அஜித்திற்காக மாஸ் ஓப்பனிங் பாடல் கிராமத்து இசையில் இயக்குனர் வினோத் கேட்டார். அதுக்காக உருவாக்கியது தான் நாங்க வேற மாதிரி. இது படத்தின் டைட்டில் பாடல். பாடல் வெளியான அன்றே பல மில்லியன் ரசிகர்கள் பார்த்து ரசித்து, கொண்டாடி வருகிறார்கள்.
யுவன் ரிக்கார்ட்சில் தனி இசை பாடல்களை வெளியிட வாய்ப்புள்ளதா?
இந்த காலத்தில் தனி இசை பாடல்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெறுகிறது, விரைவில் எண்ணம் போல் வாழ்க்கை பாடல் வெளியிடுகிறேன். இந்த பாடல் கொரோனா கடந்து பாஸிட்டிவ் வாழ்க்கையை சொல்லும் பத்திரிகையாளர்களுக்காக எழுதப்பட்டுள்ளது சிறப்பு. திறமையாளர்களை இதன் மூலம் வெளிக்கொண்டுவர விரும்புகிறேன்.