ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி | திலீப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் மோகன்லால் | 100 கோடி வசூலைக் கடந்த 'சாயரா' | இப்போதே ரூ.25 கோடி அள்ளிய 'ஹரிஹர வீரமல்லு' | சாய் அபயங்கர் இசையமைத்த முதல் டீசர் 'கருப்பு' : ரசிகர்கள் எதிர்பார்ப்பு | 200 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாட்டர் பாக்கெட்' | பிளாஷ்பேக்: மறைந்த நடிகை சரோஜா தேவியின் மறக்க முடியாத 50வது திரைப்படம் “இருவர் உள்ளம்” | வாயில் சுருட்டு உடன் சூர்யா... சமூக அக்கறை இது தானா : ரசிகர்கள் அதிர்ச்சி | சைனீஸ் உணவு சாப்பிட்டு விட்டு முத்தமிட வந்த நடிகரிடம் வித்யா பாலன் கேட்ட கேள்வி | ஐ அம் பேக் ; மீண்டும் இன்ஸ்டாகிராமுக்கு திரும்பிய ஸ்ருதிஹாசன் |
கான்வெண்ட் பள்ளி மாணவர்களுக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கும் இடையே ஏற்படும் மோதலையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் விறுவிறுப்பாக சொல்லும் படமாக மலையாளத்தில் பதினெட்டாம்படி எனும் பெயரில் வெளிவந்து வெற்றி பெற்றது. இப்படம் தமிழில் லோக்கல் பாய்ஸ் பெயரில் வெளிவருகிறது. இதில், மம்முட்டி, ஆர்யா, பிருத்விராஜ், பிரியாமணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
சங்கர் ராமகிருஷ்ணன் இயக்கியுள்ள இப்படத்தில் அரசு பள்ளி மாணவராக ஆர்யா நடித்துள்ளார். காஷிப் இசையமைக்கிறார். கூட்ட நிதி (Crowd Fund) மூலம் படங்களை தயாரித்து வெளியிட்டு முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை ஏற்படுத்தி கொடுத்த ரசிமீடியா மேக்கர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. ஜெ.என் மீடியா ஒர்க் தியேட்டர் உரிமத்தை பெற்று வெளியிடுகிறது.