தமிழில் இயக்குனர் ஆனார் ஷாலின் ஜோயா : 90களில் நடக்கும் கதை, பிரிகிடா ஹீரோயின் | பொங்கல் ரேசில் இணைந்த இன்னொரு படம் | 'ப்ரோ கோடு' தலைப்பிற்கு சிக்கல்: டில்லி உயர்நீதிமன்ற தடையால் தலைவலி | ரியோவுக்கு பிடித்த ஹீரோயின் : மனைவி சொன்ன பதில் | காதலருடன் புதிய படத்திற்கு பூஜை போட்ட சமந்தா | இந்த வாரம், ஓடிடி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் | மார்கோ-2வை ஒதுக்கி வைத்துவிட்டு மம்முட்டி படத்தை அறிவித்த தயாரிப்பாளர் | தனுஷ், கார்த்தி இல்லாமல் இரண்டாம் பாகமா ? ; செல்வராகவன் பதில் | 'ஆர்யன்' படத்தில் 'கண்ணூர் ஸ்குவாட்' இன்ஸ்பிரேஷன் ; மனம் திறந்த விஷ்ணு விஷால் | நடிகர் ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் |

பிரபல சமையல் கலைஞர் மற்றும் நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரு மகன்கள் உள்ள நிலையில் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸ்டலாவை ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்தார். தற்போது ஜாய் கிரிஸ்டலா கர்ப்பமாக உள்ள நிலையில் ரங்கராஜ் தன்னை ஏமாற்றி விட்டதாக கூறி சமீபத்தில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, ‛‛நாங்கள் திருமணம் செய்து ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. ஒரே வீட்டில் ஒன்றாக வசித்தோம். கர்ப்பமாக இருக்கும் என்னை அவர் ஏமாற்றிவிட்டார். என் குழந்தைக்கு அவர் பதில் சொல்ல வேண்டும்'' என தெரிவித்தார்.
தொடர்ந்து வலைதளத்தில் கிரிஸ்டலாவிடம் ரங்கராஜ் கொஞ்சும் பேசும் வீடியோ மற்றும் நெருக்கமான போட்டோக்களை கிரிஸ்டலா வெளியிட்டார். இந்நிலையில் அவர் முதல்வரிடம் கோரிக்கை ஒன்றை வைத்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், ‛‛மாதம்பட்டி ரங்கராஜ் மீது சென்னை, கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்து பத்து நாட்கள் ஆகிவிட்டது. எந்த முன்னேற்றமும் இல்லை. நான் தற்போது 7 மாதம் கர்ப்பமாக இருக்கிறேன். பார்வையற்ற தனது தாய் உடன் சென்று புகார் அளித்தேன். ஆனால் ரங்கராஜிற்கு விஐபி அந்தஸ்து அளிக்கப்படுகிறது. வலைதளங்களில் எனக்கு எதிராக தவறான கருத்துக்களை பரப்பி வருகிறார். என்னை போன்ற பெண்கள் உங்கள் அரசை நம்புகிறோம் அப்பா(முதல்வர் ஸ்டாலின்). இதில் நீங்கள் தலையிட்டு நியாயம் பெற்றுத்தர வேண்டும் என கையெடுத்து கும்பிட்டு கேட்கிறேன். எந்த விஐபியும், ஒரு பிரபலமும் பெண்களுக்கு எதிராக இதுபோன்ற குற்றத்தைச் செய்துவிட்டு, எந்த நடவடிக்கையும் இல்லாமல் சுற்றித் திரிய முடியுமா? என் வயிற்றில் உள்ள குழந்தைக்கும், எனக்கும் நீதி வேண்டும்'' என தெரிவித்து ரங்கராஜ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர் ஸ்டாலினுக்கும், சென்னை போலீஸ் கமிஷனருக்கும் டேக் செய்துள்ளார் கிரிஸ்டலா.