விளம்பர படப்பிடிப்பின் போது ஜூனியர் என்டிஆருக்கு காயம்! | விடைப்பெற்றார் ரோபோ சங்கர்; கண்ணீர் மல்க திரையுலகினர், ரசிகர்கள் பிரியாவிடை | 'டிரெயின்' படத்திற்காக களத்தில் இறங்கிய தாணு! | 'ஓ.ஜி' படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | 'மகுடம்' படத்தில் துஷாரா விஜயன் சம்மந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவு! | லோகேஷ் அழைத்தால் கண்ணை மூடிக்கொண்டு நடிப்பேன் : அர்ஜுன் தாஸ் | காந்தாரா சாப்டர் 1க்கு டப்பிங் பேசிய ருக்மணி வசந்த் : செப்., 22ல் டிரைலர் ரிலீஸ் | ரூ.100 கோடி வசூலித்த சிவகார்த்திகேயனின் மதராஸி | சென்னையில் மழை : படகு சவாரி கேட்ட பூஜா ஹெக்டே | பேரனுக்கு நாளை(செப்.,19) காது குத்து விழா வைத்திருந்த நிலையில் ரோபோ சங்கர் மரணம் |
சுதீஷ்சங்கர் இயக்கத்தில் வடிவேலு, பஹத்பாசில் நடித்த 'மாரீசன்' படம், கடந்த வாரம் வெளியானது. இந்த படத்தின் கருவும், வடிவேலுவின் நடிப்பும் பாராட்டப்பட்டது. விமர்சன ரீதியாக படத்துக்கு நல்ல வரவேற்பு, ஆனால், தியேட்டரில் படத்துக்கு ஏனோ வரவேற்பு இல்லை. படம் வெளியான முதல் 3 நாட்கள் ஓகே ரகம். ஒரு சில இடங்களில் ரசிகர்கள் வராததால் தியேட்டர் ஷோ கேன்சல் ஆனது. திங்கள், செவ்வாய் இன்னும் நிலைமை மோசமாக, பல இடங்களில் மாரீசன் ஷோ ரத்தானது. இந்த படத்துடன் வெளிவந்த 'தலைவன் தலைவி' படத்துக்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது. இதுவரை அந்த படம் 30 கோடி வரை வசூலித்ததாக தகவல். ஆனால், மாரீசன் படம் இதுவரை 5 கோடியை கூட தாண்டவில்லை.
அதேசமயம், தலைவன் தலைவி படத்தில் வசூலும் திங்கள், செவ்வாய் கிழமைகளில் எதிர்பார்த்ததைவிட மிகக்குறைவான வசூலையே ஈட்டி இருக்கிறது. இந்த படங்களுடன் வெளியான 'மகாஅவதார் நரசிம்மா' படத்துக்கு தமிழகத்தில் பெரிய வசூல் இல்லை. ஆனால் தெலுங்கு, இந்தியில் அந்த படம் 25 கோடி வசூலை அள்ளி இருக்கிறது. இத்தனைக்கும் அந்த படம் அனிமேஷன் படம். வடிவேலு படத்துக்கு என்னாச்சு என்று விசாரித்தால், வடிவேலுவை காமெடி ஹீரோவாகவே மக்கள் பார்க்கிறார்கள். அவர் குணச்சித்திர ரோலில் நடித்த மாமன்னனை ஏற்கவில்லை. அதேபோல், மாரீசனையும் விரும்பவில்லை. தவிர, மாரீசன் படத்துக்கு சரியான பப்ளிசிட்டி இல்லை. படத்துக்கு பாடல் வெளியீட்டுவிழா, ப்ரி ரிலீஸ் ஈவன்ட் நடத்தப்படவில்லை. வடிவேலும் ஒன்றிரன்டு பேட்டி கொடுத்துவிட்டு ஒதுங்கிவிட்டார். தலைவன் தலைவி படக்குழுவினர் நன்றாக பப்ளிசிட்டி செய்தனர் என்கிறார்கள்.