பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீராமிதுனை கேரளாவில் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
சர்ச்சைக்கு பெயர் பெற்ற நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன் திரையுலகினர் குறித்து தொடர்ந்து சர்ச்சைக்குரிய வீடியோக்களை வெளியிட்டு பலரது கண்டனத்திற்கு ஆளாகி வந்தார். சமீபத்தில் பட்டியல் இன மக்கள் குறித்து அவதுாறாக பேசி, வீடியோ ஒன்றை வெளியிட்டார். போலீசார் அவர் மீது ஏழு பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளனர். விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பி இருந்தனர்.
ஆனால், ஆஜராகாமல் இந்த சின்ன விஷயத்திற்காக, நாடே போர் களம் போல மாறி உள்ளது. நான் வெளியிட்ட வீடியோவில், ஒட்டுமொத்த பட்டியல் இன மக்கள் குறித்து தவறாக பேசவில்லை; என்னை தொந்தரவு செய்தவர்களை பற்றி மட்டுமே குறிப்பிட்டு பேசினேன். மீண்டும் என்னை மக்கள் மத்தியில் தவறாக காட்ட முற்படுகின்றனர். வேண்டும் என்றால், என்னை தாராளமாக கைது செய்யுங்கள். காந்தி, நேரு போன்றோர் சிறைக்கு செல்லவில்லையா. என்னை கைது செய்ய முடியாது. அப்படி ஒரு சூழல் எனக்கு வராது. அப்படியே கைது செய்ய வேண்டும் என்றால், அது கனவில் தான் முடியும். என பேசி, நடிகை மீராமிதுன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், மீரா மிதுனை கேரளாவில் வைத்து சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். அவரை சென்னை கொண்டு வருகின்றனர். முன்னதாக கைதாகும் போது கதறி அழுதபடி ஒரு வீடியோ வெளியிட்டார் மீரா மிதுன். அதில் போலீசார் தன் மீது கை வைத்தால் கத்தியை எடுத்து என்னை நானே குத்திக் கொண்டு தற்கொலை செய்வேன் என தெரிவித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் தான் ‛‛போலீசார் என்னை கைது செய்ய முடியாது, அப்படியே கைது செய்தால் அது கனவில் தான் நடக்கும்'' என தெனாவெட்டாக பேசியிருந்தார் மீரா மிதுன்.