லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' | அஜித்தை மீண்டும் இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன் | 'வா வாத்தியார்' : இப்போது வர மாட்டார் ? |
மெல்போர்ன் இந்திய திரைப்பட விழா, ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஒரு பெரிய திரைப்பட விழா. இந்த ஆண்டு விழா, இன்று ஆரம்பமாகி ஆகஸ்ட் 20ம் தேதி வரை நடைபெறுகிறது. ஆகஸ்ட் 15ம் தேதி நடைபெற உள்ள விழாவில் மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்திற்கு அஞ்சலி நிகழ்வு ஒன்று நடைபெற உள்ளது.
மெல்போர்னைச் சேர்ந்த இசைக் கலைஞர்களனான அனுப் திவாகரன், லட்சுமி ராமசாமி, சவுசிக் கணேஷ், மாளவிகா ஹரிஷ் அடங்கிய 'மியூசிக்கடா' என்ற இசைக் குழுவினர் எஸ்பிபியின் பாடல்களைப் பாடி அஞ்சலி செலுத்த உள்ளார்கள். இத்திரைப்பட விழாவில் சூர்யா நடித்துள்ள 'சூரரைப் போற்று', பா ரஞ்சித் தயாரித்து தமிழ் இயக்கியுள்ள 'சேத்துமான்', அருண் கார்த்திக் இயக்கிய 'நசிர்' ஆகிய படங்கள் தியேட்டர்களில் திரையிடப்படுகின்றன.
“கன்யா, கயமை கடக்க, மை மிர்ரர், ரெட்டை ஜடை, தி லாயல் மேன்,” ஆகிய குறும் படங்கள் ஆன்லைன் மூலமும், 'வோம்ப்” குறும்படம் தியேட்டரிலும் திரையிடப்படுகிறது.