ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊரும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? | 50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் |

செல்வா இயக்கத்தில் அரவிந்த்சாமி, ரித்திகா சிங், நந்திதா, சிம்ரன், சாந்தினி, தம்பி ராமையா , ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் வணங்காமுடி. மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பாக கணேஷ் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்த டீசரில் அரவிந்தசாமியா இது? என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு அதே இளமையுடன் விதவித கெட்டப்புகளில் கவனம் ஈர்க்கிறார்.
செல்வா கூறியதாவது... ''இது போலீஸ் கதை. வழக்கமான டமால்-டூமில் போலீஸ் கதையாக இல்லாமல் தன்னுடைய புத்திச்சாலித்தனத்தை கொண்டு ஹீரோ எப்படி குற்றவாளிகளை கண்டுபிடிக்கிறார்.. அந்த வகையில் ஒரு போலீஸ் அதிகாரியின் வாழ்க்கையில் வழக்குகள் எப்படி உள்ளே நுழைகிறது என்பதையும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க அவர் எவ்வித முயற்சி எடுக்கிறார் என்பதையும் விறுவிறு திரைக்கதையில் காட்சிப்படுத்தியுள்ளேன். அரவிந்தசாமியின் படங்களில் இது முக்கிய படமாக இருக்கும்,என்றார்.




