இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
சினிமா தயாரிப்பில் இப்போது பல நடைமுறைகள் மாறிவிட்டன. தங்களது படம் பற்றிய தகவல்கள் எப்படியாவது 'லீக்' ஆகிவிடக் கூடாது என்பதற்காக பல பாதுகாப்பு வழிமுறைகளை படக்குழுவினர் பின்பற்றுகிறார்கள்.
அவற்றில் ஒன்று அலுவலகங்களில் அணிவதைப் போன்ற ஐ.டி. கார்டு. படக்குழுவில் உள்ள இயக்குனர் முதல் லைட்மேன், உதவியாளர்கள் வரை அனைவருக்கும் அவர்களது பெயர், செய்யும் வேலை ஆகியவற்றுடன் புகைப்பட ஐ.டி கார்டுகள் வழங்கப்படுகிறது. இதனால், படக்குழுவிற்கு சம்பந்தமில்லாமல் யாராவது அரங்கிற்குள் நுழைந்தால் அவர்களைத் தடுக்க வசதியாக இருக்கிறது.
ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் படப்பிடிப்பு தற்போது உக்ரைன் நாட்டில் நடைபெற்று வருகிறது. அங்கு படப்பிடிப்புத் தளத்தில் ஐ.டி. கார்டு அணிந்து ஜுனியர் என்டிஆர் படப்பிடிப்பில் கலந்து கொண்டதை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. பக்கத்தில் இயக்குனர் ராஜமவுலியும் அவருடைய ஐ.டி. கார்டை எடுத்துக் காட்டுவதும் புகைப்படத்தில் உள்ளது.
அது குறித்து இன்ஸ்டாவில், “பல வருடங்களுக்குப் பிறகு ஐ.டி கார்டு அணிகிறேன். செட்டில் முதல் முறை..,” எனக் குறிப்பிட்டுள்ளார். கல்லூரியில் படித்ததற்குப் பிறகு இப்போதுதான் மீண்டும் ஐ.டி கார்டு அணிகிறார் போலிருக்கிறது.