ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தமிழ் சினிமாவில் தடம் பதிக்கும் அளவிலான படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ளவர் விஜய் சேதுபதி. இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு டிவியில் ஒளிபரப்பான 'நம்ம ஊரு ஹீரோ' நிகழ்ச்சி மூலம் டிவி தொகுப்பாளரானார்.
அந்த நிகழ்ச்சிக்காக தமிழகத்தில் பல்வேறு துறைகளில் தடம் பதித்த சிலரை பேட்டி கண்டார். சுமார் 16 எபிசோடுகள் வரை அந்த நிகழ்ச்சி டிவியில் ஒளிபரப்பானது. அதன்பிறகு அவர் சினிமாவில் மிகவும் பிஸியாகியதால் டிவி பக்கம் வரவில்லை.
இப்போது 'மாஸ்டர் செப்' நிகழ்ச்சி மூலம் மீண்டும் டிவி பக்கம் தொகுப்பாளராக வந்துள்ளார். சர்வதேச அளவில் பல நாடுகளில் ஒளிபரப்பாகி வரும் அந்த நிகழ்ச்சியின் தமிழ் வடிவத்திற்கு விஜய் சேதுபதிதான் தொகுப்பாளர். வரும் ஆகஸ்ட் 7ம் தேதி முதல் அந்நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.
தமிழில் விஜய் சேதுபதி எப்படி மீண்டும் டிவி பக்கம் வந்துள்ளாரோ அதே போல தெலுங்கிலும் ஜுனியர் என்டிஆர் வந்துள்ளார். ஆனால், ஜுனியர் என்டிஆர் நான்கு வருடங்கள் கழித்து வந்துள்ளார்.
2017ல் ஸ்டார் மா டிவியில் ஒளிபரப்பான 'பிக் பாஸ்' சீசன் 1 நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி டிவி பக்கம் வந்தார் என்டிஆர். அதற்குப் பிறகு நான்கு வருடங்கள் கழித்து இப்போது ஜெமினி டிவியில் ஒளிபரப்பாக உள்ள 'எவரு மீலோ கோட்டீஸ்வரலு' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கு உள்ளார். இதற்கான புரோமோ தற்போது வெளியாகி உள்ளது. இந்த மாதம் ஒளிபரப்பாக இருக்கும் இந்நிகழ்ச்சியின் ஒளிபரப்புத் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
'எவரு மீலோ கோட்டீஸ்வரலு' நிகழ்ச்சியின் போட்டியைச் சமாளிக்கும் வகையில் 'ஸ்டார் மா' டிவி தெலுங்கில் 'பிக் பாஸ்' சீசன் 5 விரைவில் ஒளிபரப்பாக உள்ளதாக அதிகாரப்பூர்வ வீடியோ அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.