புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
கார்த்திக் நரேன் இயக்கத்தில், தனுஷ், மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடிக்கும் தனுஷின் 43வது படத்தின் தலைப்பு இன்று தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு அறிவிக்கப்பட்டது. 'மாறன்' என்ற தலைப்பை அறிவித்து, முதல் பார்வை போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்கள். இத்தலைப்பில் ஏற்கெனவே, சத்யராஜ், சீதா, ரகுவண்ணன், சந்தோஷி மற்றும் பலர் நடிக்க 2002ம் ஆண்டு ஒரு படம் வெளியாகி உள்ளது.
1996ம் ஆண்டு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி முதலாமாண்டு மாணவரான நாவரசு, ராகிங் காரணமாகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம் தான் 2002ல் வெளிவந்த 'மாறன்'. குடும்பப் பின்னணியில் க்ரைம் த்ரில்லர் ஆக உருவான படம் அந்த 'மாறன்'.
இந்த 2021ம் ஆண்டு 'மாறன்' படத்தின் முதல் தோற்றத்தைப் பார்க்கும் போதும் ஒரு ஆக்ஷன் படம் போலத்தான் தோன்றுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்னும் பத்து நாட்களில் படப்பிடிப்பு முடிவடைய உள்ளதாகத் தெரிகிறது.
தனுஷின் அடுத்த வெளியீடாக வர உள்ள 'மாறன்' படம் தியேட்டர்களில்தான் வெளியாகும் என்கிறார்கள்.