ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் பலர் நடிக்கும் சரித்திரப் படம் 'பொன்னியின் செல்வன்'. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை யாரோ சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். அப்படங்களைப் பார்த்து ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.
இரண்டு விதமான படகுகளின் புகைப்படங்கள் தான் லீக் ஆகியுள்ளன. அவற்றைப் பார்க்கும் போதே 'பொன்னியின் செல்வன்' நாவலில் இடம் பெற்ற ஓவியங்களைப் போலவே அந்தப் புகைப்படங்களும் உள்ளன. நாவல் ரசிகர்களின் கற்பனையை உண்மையாக்கும் அளவிற்குத்தான் மணிரத்னம் படத்தை உருவாக்கி வருகிறார் என்பதற்கு அவை சாட்சியாக உள்ளன.
'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பார்வை போஸ்டர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.