ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
நடிகர் தனுஷ் தனது 38ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்களும் சினிமா நண்பர்களும் வாழ்த்து கூறி வருகின்றனர். அதோடு இன்றைய தினம் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 43ஆவது படமான மாறன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தனுஷ் நடித்த அசுரன், கர்ணன் படங்களை தயாரித்த தயாரிப்பாளர் எஸ்.தாணுவும் தனுஷை கிரேக்க மன்னனைப்போன்று உருவகப்படுத்தி ஒரு காமன் டிபி வெளியிட்டுள்ளார். அதில் தாடி, மீசை கெட்டப்பில் கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்திருக்கிறார் தனுஷ். அதோடு தனுஷிற்கு ஒருபிறந்த நாள் வாழ்த்து மடலும் வெளியிட்டுள்ளார் தாணு.
அதில், தம்பி... இன்று உங்கள் பிறந்த நாள், என்றும் அது சிறந்த நாள். ஜூலை 28 உங்களை தந்ததால் உயர்ந்த நாள். இனிய இந்நாளில் எல்லா வளமும் நலமும் பெற்று, தேக நலம், பாத பலம், ஆயுள் சதம் கடந்து வாழ்க பல்லாண்டு என்றும் டுவிட்டரில் தனுஷை வாழ்த்தியுள்ளார் தயாரிப்பாளர் தாணு.