மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு வெளிவந்த படங்களில் அரசியல் மற்றும் சாதிய ரீதியிலான படமாக அமைந்த படம் 'கர்ணன்'. மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், ரஜிஷா விஜயன், லால் மற்றும் பலர் நடித்த படம்.
அப்படம், அதிமுக ஆட்சிக் காலத்தில் 1995ல் நடந்த கொடியங்குளம் கலவரத்தை கதைக்களமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம். ஆனால், படத்தில் திமுக ஆட்சிக் காலமான ‛1990' களின் பிற்பகுதியில் நடந்ததாக குறிப்பிட்டிருந்தார்கள்.
தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு முன்பாக அந்தப் படம் வெளிவந்த போது, நடிகரும், தயாரிப்பாளரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவரது டுவிட்டரில் அந்தத் தவறு குறித்து “1995 அதிமுக ஆட்சியில் நடந்த கொடியன்குளம் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அச்சம்பவம் 1997ல் கழக ஆட்சியில் நடந்ததாக காட்டப்பட்டுள்ளது. இதனை தயாரிப்பாளர், இயக்குநரிடம் சுட்டிக்காட்டினேன். அந்தத் தவறை இரு தினங்களில் சரிசெய்துவிடுகிறோம் என உறுதியளித்தனர்,” எனப் பதிவிட்டிருந்தார்.
அதன்பின் படக்குழுவினர் “90களின் இறுதியில்” என்று மாற்றினர். அதற்கும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்தது. அதை உதயநிதியும் மீண்டும் சுட்டிக்காட்டினார். ஒடுக்கப்பட்ட மக்களின் மேன்மைக்காக கருணாநிதி செய்த பங்களிப்புகள் காலத்தில் அழியாதவை. அதை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. எனவே, இந்த விஷயத்தை இத்துடன் விடுத்து ஆக்கபூர்வமான பணிகளில் கவனம் செலுத்துவோம், எனக் குறிப்பிட்டிருந்தார்.
இருப்பினும், “90களின் இறுதியில்” என்பது அடுத்து “அடிப்படை தேவைகளுக்காகவும், மனித உரிமைகளுக்காகவும், சாமானிய மக்கள் உயிர்ப்போடு போராடத் தொடங்கிய கால காட்டம், சாட்சியாக, பட்டாம்பூச்சி,” என்று மாற்றினார். இந்த வரிகள் தான் இப்போதும் ஓடிடியில் உள்ள கர்ணன் படத்திலும் இடம் பெற்றுள்ளது. அப்போதும் கூட படக்குழு “95ம் ஆண்டு” என்ற சரியான வருடத்தை குறிப்பிடவில்லை.
அந்த 'கர்ணன்' பட விவகாரத்தை திமுகவினர் இன்னும் மறக்கவில்லை. உதயநிதி தவறை சுட்டிக்காட்டியும், கலவரம் நடந்த அந்த ஒரு குறிப்பிட்ட ஆண்டை சரியாகத் திருத்தாத, 'கர்ணன்' இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ளார் என்ற செய்திகள் திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது 'சார்பட்டா பரம்பரை' படத்தை இயக்குனர் பா.ரஞ்சித், திமுகவை பெருமைப்படுத்தும் விதத்தில் எடுத்துள்ளதால் இரண்டு படங்களையும் ஒப்பிட்டுப் பேசி வருகிறார்கள்.