ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
சென்னை சேப்பாக்கம் -- திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ., உதயநிதியை, சில நாட்களாக தொகுதிக்குள் காண முடியவில்லை என்பதால், தொகுதி மக்கள் பலரும், கோரிக்கை மனுக்களோடு அவரது வீடு தேடி சென்றனர். மனுக்களை பெற்ற உதயநிதி குடும்பத்தினரும், தி.மு.க,வினரும், 'எம்.எல்.ஏ., படப்பிடிப்புக்கு போயிருக்காரு. சில நாட்களில் வந்துடுவாரு. உங்களை நேரில் சந்திப்பாரு'ன்னு கூறி அனுப்புகின்றனர்.
இப்படி தினமும், வீட்டுக்கே மனுக்கள் வருவது, உதயநிதியின் தந்தையும், முதல்வருமான ஸ்டாலின் கவனத்துக்கு சென்றது. அதையடுத்து, உதயநிதியிடம் பேசிய ஸ்டாலின், 'கட்சி வேலையும், எம்.எல்.ஏ., பொறுப்பும் அதிகமாக இருக்க, தொடர்ந்து ஏன் நடிக்கிறாய்' என, கேட்டுள்ளார். 'நடித்தது போதும்; தீவிரமாக அரசியல் வேலையை பார்' என்றும் கூறியுள்ளார். இதனால், தற்போது நடித்து வரும், மூன்று படங்களை விரைவாக முடித்து விட்டு, அதன்பின், சினிமாவுக்கு தற்காலிகமாக முழுக்கு போட, உதயநிதி திட்டம் போட்டுள்ளார்.
இதுகுறித்து, உதயநிதி ஆதரவாளர்கள் கூறியதாவது: மகிழ்திருமேனி இயக்கத்தில், உதயநிதி நடிக்கிறார். அந்த படத்துக்கு, இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இருந்தாலும், 90 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டது. இன்னும் சில நாட்களுக்குள், மொத்த படமும் முடிந்து விடும்.அடுத்து, 'கனா' பட இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், போனி கபூர் தயாரிக்கும், 'ஆர்டிக்கிள் 15' என்ற, மொழி மாற்று படத்தில், உதயநிதி நடிக்க உள்ளார். இதையடுத்து, இயக்குனர் மாரி செல்வராஜ் படத்தில் நடிக்க உள்ளார்.
சினிமாவில் இருந்து தற்காலிகமாக ஒதுங்குவதற்கு முன், ரசிகர்கள் பலருக்கும் பிடித்த, ஒரு சிறந்த படமாக, மாரி செல்வராஜ் படம் இருக்கும் என, உதயநிதி நம்புகிறார். மாரி செல்வராஜ் படத்தை முடித்த பின், முழு நேரமும் அரசியல் பணியில், உதயநிதி கவனம் செலுத்துவார். அதிகபட்சம், நான்கு மாதம் மட்டுமே, சினிமா நடிகராக உதயநிதி இருப்பார்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.