கவினுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் | தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்கும் கயாடு லோஹர் | பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில் | கூலி ரிலீஸ் தேதி கவுன்ட் டவுன் போஸ்டர் வெளியானது | “என் உயிருக்கு ஏதாவது ஆனால்...” : நடிகர் பாலாவின் 3-வது மனைவி மருத்துவமனையில் அனுமதி | அடுத்த ஆண்டு துவக்கத்தில் விக்ரமை இயக்கும் பிரேம்குமார் | நடிகை கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை பிறந்தது | 'குட் பேட் அக்லி' வெளியாகி மூன்று மாதங்கள் : இன்னும் வராத அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு | 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் ‛நோ' விமர்சனம் : விஷால் வேண்டுகோள் | ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் |
விஜய் சேதுபதி நடித்து முடித்துள்ள படம் துக்ளக் தர்பார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன், பார்த்திபன், ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.அறிமுக இயக்குநர் பிரசாத் தீனதயாளன் இயக்கி உள்ளார்.
இந்த படம் தியேட்டரில்தான் வெளியிடப்படும் என்று அதன் தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார். ஆனால் அதன்பிறகு ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது படம் நேரடியாக டிவியில் வெளியாகும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. விஜய்சேதுபதி தற்போது சமையல் நிகழ்ச்சி நடத்தி வரும் சேனலில் படம் ஒளிபரப்பாக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக கூறப்படுகிறது. சின்னத்திரையில் வெளியான பிறகு ஓடிடி தளத்தில் வெளிவரும் என்று தெரிகிறது.
சமுத்திரகனி நடித்த ஏலே, வெள்ளையானை, விக்ரம் பிரபு நடித்த புலிக்குத்தி பாண்டி, ஜி.வி.பிரகாஷ் நடித்த வணக்கம்டா மாப்ள உள்ளிட்ட சிறு பட்ஜெட் படங்கள்தான் தொலைக்காட்சியில் வெளியானது. முதன் முதலாக ஒரு பெரிய நட்சத்திரத்தின் படம் தொலைக்காட்சியில் வெளியாவது தியேட்டர் அதிபர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என்று தெரிகிறது. இதுபற்றிய முறையான அறிவிப்புகள் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும்.
இதேபோன்று ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள பூமிகா டிவியில் ஒளிபரப்பாகிறது. இது ஐஸ்வர்யா ராஜேஷின் 25வது படமாகும். இதில் அவர் பூமா தேவியாக நடித்திருக்கிறார். படத்தை அறிமுக இயக்குனர் ரதீந்திரன் ஆர்.பிரசாத் இயக்கி உள்ளார். இந்த படம் அடுத்த மாதம் வெளியாகும் என்று தெரிகிறது.