புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் | சுவர் ஏறி குதித்து குழந்தையை காப்பாற்றிய திஷா பதானியின் தங்கை : குவியும் பாராட்டுக்கள் | 18வது திருமண நாளில் 'பேமிலி' புகைப்படத்தைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய் | மகேஷ்பாபுவுக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் | கதை நாயகனாக நடிக்கும் 'காக்கா முட்டை' விக்னேஷ் | 'நிழற்குடையில்' கதை நாயகியாக நடிக்கும் தேவயானி | கால் பாதத்தை டீ ஸ்டாண்ட் ஆக மாற்றிய மம்முட்டி ; வைரலாகும் புகைப்படம் |
சித்ராலயா கோபு இயக்கிய காசேதான் கடவுளடா படம் தற்போது அதே பெயரில் ரீமேக் ஆகிறது. மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த் நடிப்பில், ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகிறது. குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இவர்களுடன் யோகிபாபு, ஊர்வசி, கருணாகரன், தலைவாசல் விஜய், மனோபாலா உட்பட பலர் நடிக்கிறார்கள். கண்ணன் இசையமைக்க, பாலசுப்பிரமணியம் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்புகள் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பூஜையுடன் தொடங்கியது. படப்பிடிப்பை ஒரே கட்டமாக 45 நாளில் முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.
இதுகுறித்து இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆர்.கண்ணன் கூறியதாவது: மிகுந்த உற்சாகத்துடன் படப்பிடிப்பை துவக்கியுள்ளோம். ஒரே கட்டமாக 45 நாட்களில் இப்படத்தின் படப்பிடிப்பை முடிக்கவுள்ளோம். நீண்ட கோவிட் பொதுமுடக்க காலத்திற்கு பிறகு தொழில் நுட்ப கலைஞர்களையும், நடிகர்களையும் ஒன்றாக பணியில் பார்ப்பது பெரும் மகிழ்ச்சியை தருகிறது. இன்னொரு புறம் தமிழின் எவர்கிரீன் கிளாசிக் காமெடி படமாக, மக்களின் மனதில் என்னென்றும் நிற்கும் காசே தான் கடவுளடா படத்தை அதன் தரம் சற்றும் குறையாமல் ரீமேக் செய்ய வேண்டிய கடமையுணர்வு உள்ளது.
தங்களது அற்புத நடிப்பு திறமை மற்றும் நகைச்சுவை உணர்ச்சியால் மக்களை மகிழ்விக்கும் நடிகர் குழு இப்படத்தில் இணைந்துள்ளார்கள். இந்த அட்டகாசமான நடிகர் குழுவுடன், திறமை மிகுந்த தொழில்நுட்ப குழுவும் இணைந்து இப்படத்தினை மிகச்சிறந்த படைப்பாக தருவோம் எனும் முழு நம்பிக்கை உள்ளது. குடும்பங்கள் இணைந்து கொண்டாடும் படைப்பாக, தியேட்டரில் சிரிப்பு மழை பொழியும் படைப்பாக, இப்படம் இருக்கும் என்றார்.