புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
களத்தில் சந்திப்போம் படத்திற்கு பிறகு சத்தமே இல்லாமல் அருள்நிதி ஒரு படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை யு டியூப் சேனலான எருமசாணி புகழ் விஜய்குமார் ராஜேந்திரன் இயக்கி உள்ளார். ஒளிப்பதிவாளர் அரவிந்த்சிங் தயாரித்துள்ளார். இந்த படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து சமீபத்தில் திரையுலகின் முன்னணியினருக்கு போட்டு காட்டப்பட்டது. படத்தை பார்த்த பலரும் அதனை வாங்கிக் கொள்ள முன்வந்துள்ளனர். இதில் சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் படத்தை வாங்கி உள்ளது.
இதுகுறித்து அதன் உரிமையாளர் பி.சக்திவேலன் கூறியிருப்பதாவது: அருள்நிதி மிக வித்தியாசமான களங்களில், ரசிகர்கள் ரசிக்கும்படியான படங்களையும், குடும்பத்தினர் கொண்டாடும் படங்களையும், தொடர்ச்சியாக தந்துவருகிறார். அவரது சமீபத்திய படமான களத்தில் சந்திப்போம் திரைப்படம் திரைத்துறையில் அவரது மதிப்பை உயர்த்தியிருக்கிறது.
ஒரு நண்பரின் மூலமாக அவரது இந்த திரைப்படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. படம் முடியும் வரையிலும் படம் எவ்வாறு செல்லும் என்பதை கணிக்கமுடியாதபடி, பல ஆச்சர்யங்களை தந்தது. அனைத்து வகையான ரசிகர்களும் கொண்டாடும் அம்சங்கள் படத்தில் நிரம்பியிருந்தது. படம் முடிந்த கணத்திலேயே படத்தின் அனைத்து உரிமைகளையும் பெற்று விட வேண்டும் என்கிற வேட்கை என்னுள் உண்டானது.
அருள்நிதியின் நடிப்பு மிக அபாரமானதாக இருந்தது. இப்படத்தின் வெளியீட்டுக்கு பிறகு அவர் முன்னணி நட்சத்திரங்களுல் ஒருவராக உயர்வார். பல படங்களில் பெருமையுடன் வழங்குகிறோம் என்பதை வெறும் வார்த்தையாக உபயோகிப்பார்கள். ஆனால் நாங்கள் இப்படத்தை மிக பெருமையுடன் வழங்கவுள்ளோம். இப்படத்தை கண்டிப்பாக தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாடுவார்கள். என்றார்.