குட் பேட் அக்லி : 'ஓஎஸ்டி' விரைவில் ரிலீஸ் | 15 நாளில் எடுக்கப்பட்ட வெப்சீரிஸ் | 30 ஆண்டுகளுக்குப் பிறகு ‛ஜெயிலர் 2' படப்பிடிப்பில் மீண்டும் ரஜினியை சந்தித்த நடிகர் தேவன் | 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ‛புலி முருகன்' இயக்குனருடன் கைகோர்த்த பிரித்விராஜ் | ஓடிடியில் அதிகம் பார்க்கப்படும் 'தக் லைப்'!! | கவினுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் | தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்கும் கயாடு லோஹர் | பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில் | கூலி ரிலீஸ் தேதி கவுன்ட் டவுன் போஸ்டர் வெளியானது | “என் உயிருக்கு ஏதாவது ஆனால்...” : நடிகர் பாலாவின் 3-வது மனைவி மருத்துவமனையில் அனுமதி |
1920 காலகட்டத்தில் வாழ்ந்த அல்லூரி சீதா ராமராஜூ, கோமரம் பீம் ஆகிய சுதந்திர போராட்ட வீரர்களின் கதையை மையமாக வைத்து ராஜமவுலி இயக்கி வரும் படம் ஆர்ஆர்ஆர். இந்தபடத்தின் படப்பிடிப்பு கொரோனா அலை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்னும் இரண்டு பாடல் காட்சிகள் படமாக்கப்பட வேண்டியுள்ளது.
அதில் ஒரு பாடலை உக்ரைனில் உள்ள அரண்மனையிலும், இன்னொரு பாடலை ஐரோப்பாவிலும் படமாக்க திட்டமிட்டுள்ளனர். இந்த பாடல் காட்சிகளில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியாபட் மற்றும் படத்தில் நடிக்கும் மேலும் சில நடிகர் நடிகைகளும் இடம் பெறுகிறார்களாம். அந்தவகையில் இந்த இரண்டு பாடல்களுமே அடுத்த மாதத்தில் படமாக்கப்பட்டு பூசணிக்காய் உடைத்து விடுவார்கள் என்றும் டோலிவுட்டில் செய்திகள் வெளியாகியுள்ளன.