ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சினிமா படப்பிடிப்புகள் கடந்த வாரம் முதல் ஆரம்பமாகின. ஆனால், இன்று முதல்தான் விஜய் நடிக்கும் 'பீஸ்ட்', தனுஷ் நடிக்கும் பெயரிடப்படாத படம் உள்ளிட்ட படங்களின் படப்பிடிப்புகள் மும்முரமாக ஆரம்பமாகியுள்ளன.
அரசு அறிவித்துள்ள விதிமுறைகள், கட்டுப்பாடுகள் ஆகியவை கடைபிடிக்கப்பட்டே படப்பிடிப்புகள் நடைபெறுவதாகத் தெரிகிறது. படப்பிடிப்பில் கலந்து கொள்வதால் பாதுகாப்பாக இருக்க பல நடிகர்கள், நடிகைகள் ஏற்கெனவே தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள்.
தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழை காண்பித்த பிறகுதான் தொழிலாளர்கள் அனுமதிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அனைத்து விதமான பணியார்களையும் தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகே படப்பிடிப்புகளுக்கு வர வேண்டும் என சம்பந்தப்பட்ட படக்குழுவினர் தெரிவித்துள்ளதாகவும் சொல்கிறார்கள்.
இன்று ஆரம்பமாகியுள்ள விஜய்யின் 'பீஸ்ட்' படப்பிடிப்பில் கடும் கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படுவதாகச் சொல்கிறார்கள். ஆனால், படத்தின் நாயகன் விஜய் தடுப்பூசி போட்டுக் கொண்டாரா என்பது குறித்த தகவல் இன்னும் உறுதியாக தெரியவில்லை. ஆனால் சில தினங்களுக்கு முன் அவர் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக செய்திகள் வந்தன. அப்படி அவர் தடுப்பூசி போட்டிருந்தால் அதை வெளியில் அறிவித்தால், அவரது ரசிகர்களும் எந்தத் தயக்கமும் இன்றி தடுப்பூசி போட்டுக் கொள்வார்களே என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.
அஜித்தும் விரைவில் 'வலிமை' படத்தின் கடைசிகட்டப் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார் என்றும் சொல்கிறார்கள். அவர் தடுப்பூசி போட்டுக் கொண்டதன் தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, உதயநிதி ஸ்டாலின், யோகி பாபு, சூரி உள்ளிட்ட பலர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். நடிகைகள் பலரும் தடுப்பூசி போட்டுக் கொண்டதை தங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.
விஜய்யும், அஜித்தும் அவர்களது ரசிகர்களின் நலன் கருதி தடுப்பூசி போட்டுக் கொண்டதன் தகவலை வெளியிடலாமே ?.