இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்தவர் நடிகை காஜல் பசுபதி. வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தின் மூலம் அறிமுகமானார் . தொடர்ந்து ட்ரீம்ஸ், இதய திருடன், டிஷ்யூம் , கள்வனின் காதலி, சுப்பிரமணியபுரம், சிங்கம், கோ, மவுன குரு, அதிதி, இரும்பு குதிரை, அழகு குட்டி செல்லம், பழைய வண்ணாரப்பேட்டை, ஆயிரத்தில் இருவர், கலகலப்பு 2ம் பாகம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
மானாட மயிலாட நிகழ்ச்சியின்போது அதன் நடன அமைப்பாளரான சாண்டியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அடுத்த சில ஆண்டுகளிலேயே இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.
இந்த நிலையில் தனக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளதாக அவரே தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். "திடீரென திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த வாரம் திருமணம்.கொரோனா காரணமாக யாரையும் அழைக்க முடியவில்லை. தப்பா எடுத்துக்காதிங்க." என பதிவிட்டுள்ளார். ஆனால் மணமகன் குறித்து எந்த தகவலும் இல்லை. இதனால் அவர் நடித்து பங்கேற்க போகும் நிகழ்ச்சி, அல்லது நடிக்கப்போகும் படம் பற்றிய புரமோசனாக இருக்குமோ என்ற சந்தேகமும் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.