இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

தமிழ் சினிமா ரசிகர்களிடம் சுல்தான் படத்தின் மூலம் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. ஆனால் இவர் ஏற்கனவே தெலுங்கு படங்களின் மூலம் பிரபலமானார். அதுவும் கீதா கோவிந்தம் திரைப்படத்தின் மூலம் தெலுங்கு தாண்டி தமிழ் ரசிகர்களிடமும் மிகவும் பிரபலமடைந்து ஒரு கட்டத்திற்கு பிறகு ராஷ்மிகா எப்போது தமிழ் சினிமாவில் நடிப்பார் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். இவரது நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரசிகர்கள் ராஷ்மிகா நடிப்பை கொண்டாடினர்.
இந்நிலையில் ராஷ்மிகா தனது சமூக வலைத்தள பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்தார். அப்போது, விஜய்யுடன் எப்போது நடிப்பீர்கள்? என்று ரசிகர் ஒருவர் கேட்டக் கேள்விக்கு 'மிக விரைவில்' என்று பதிலளித்துள்ளார். மற்றொரு ரசிகர் 'தளபதியைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லுங்கள்?' என்று கேட்டதற்கு “விஜய் என்னுடைய காதல்” என்று பதிலளித்துள்ளார்.