கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் 'சர்வம் மாயா' | 'வாரணாசி' பட விழா செலவு 27 கோடி, ஸ்ருதிஹாசனுக்கு ஒரு கோடி | பிளாஷ்பேக்: ஒரிஜினலை வெல்ல முடியாத ரீமேக் |

தனு வெட்ஸ் மனு, கிரிஷ் 3, குயின் உள்ளிட்ட படங்களில் நடித்து பாலிவுட்டின் முன்னணி நடிகையாக திகழ்பவர் கங்கனா ரனாவத். நடிகர் ஜெயம் ரவியுடன் தாம் தூம் படத்தில் ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ்நாட்டு ரசிகர்களாலும் அறியப்பட்ட நடிகையாக இருந்து வருகிறார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாகியிருக்கும் தலைவி படத்தில் இவர் ஜெயலலிதாவாக நடித்திருக்கிறார். இந்த படம் ஊரடங்கு காரணமாக வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. விரைவில் இப்படம் வெளியாக உள்ளது.
இதையடுத்து முன்னாள் பிரதமர் இந்திராவின் வாழ்க்கை கதையில் கங்கனா நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. தவிர சமூக வலைதளத்தில் அடிக்கடி கருத்துகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இதனால் அவர் மீது வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. அவரது டுவிட்டர் பக்கமும் முடக்கப்பட்டது.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “தோல்வி அடைந்தவர்களை மக்கள் விட்டு விடுவார்கள். அவர்களை கேவலமாகவும் நடத்துவார்கள். தோல்வி அடைந்தவர்களை உலகம் வாழவும் விடாது. கஷ்டப்பட்டு உழைத்து வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களை பயமுறுத்துவார்கள். கீழே தள்ளி விடவும் முயற்சிப்பார்கள். தனிமைப்படுத்தவும் செய்வார்கள். வெற்றி பெற்றவர்கள் தனிமையில் தான் இருக்க வேண்டும். அதனால் தான் வாழ்க்கையில் ஜெயித்தவர்கள் தனித்து இருப்பார்கள் என்று கூறுகின்றனர்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.




