ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா மற்றும் பலர் நடித்த 'த்ரிஷ்யம் 2' படம் கடந்த பிப்ரவரி மாதம் ஓடிடி தளத்தில் வெளியானது. ஓடிடியில் வெளியானாலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இப்போது ஐந்து மாதங்கள் கழித்து படத்தை சினிமா தியேட்டர்களில் இன்று முதல் வெளியிடுகிறார்கள். ஆனால், இந்தியாவில் அல்ல, அரேபிய நாடுகளில். யுஎஇ நாடுகளில் 27 தியேட்டர்களிலும், கத்தாரில் 8 தியேட்டர்களிலும், ஓமனில் 2 தியேட்டர்களில் இன்று முதல் திரையிடப்படுகிறது.
இது குறித்த தகவலை படத்தின் நாயகன் மோகன்லாலே அவரது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். “த்ரிஷ்யம் 2 கடைசியாக பெரிய திரைகளை சென்றடைந்துவிட்டது,” என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
ஓடிடியில் வெளிவந்த பின்னும் படத்தைத் தியேட்டர்களில் வெளியிடுவது ஆச்சரியம்தான். என்ன இருந்தாலும் சின்னத் திரையான டிவியில் பார்ப்பதை விட பெரிய திரையான சினிமா தியேட்டர்களில் படத்தைப் பார்க்கும் அனுபவம் தனிதானே.