ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

பிடிச்சிருக்கு, முருகா, கோழி கூவுது போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்த அசோக் குமார் மாயத்திரை படத்தில் நாயகனாக நடிக்கிறார். டூலெட், திரௌபதி படங்களின் நாயகி ஷீலா ராஜ்குமார் கதாநாயகியாக நடிக்கிறார். இன்னொரு கதாநாயகியாக சாந்தினி தமிழரசன் நடிக்கிறார். அருணகிரி இசைமைக்கிறார். அறிமுக இயக்குனர் சம்பத் குமார் இயக்குகிறார்.
இப்படத்திற்கு சென்சார் குழுவினரால் யு-ஏ சான்றிதழ் வழங்கபட்டுள்ளது . திரையரங்குகள் திறந்த சில வாரங்களில் வெள்ளித்திரை விருந்தாக மாயத்திரை திரைக்கு வர இருக்கிறது .
‛‛இது ஒரு பேய் படம். ஆனால் வழக்கமான பேய் படங்களிலிருந்து இது மாறுபட்டதாக இருக்கும். படத்தில் அதிகமாக பயமுறுத்தும் காட்சிகள் இருக்காது. ஆறிலிருந்து அறுபது வரை உள்ள அனைவரும் குடும்பத்தோடு பார்க்கலாம். இது ஒரு ஜனரஞ்சகமான பொழுதுபோக்கு படம்'' என்கிறார் இயக்குனர்.