வயது 42 ஆனாலும், திரையுலகில் 22 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம்வரும் த்ரிஷா | 25வது நாளில் 'குட் பேட் அக்லி' | தலைவனாக விஜய் சேதுபதி, தலைவியாக நித்யா மேனன்! | தீபாவளிக்கு வெளியாகும் பைசன்! | 'தொடரும்' படம் தமிழ் பதிப்பு ரிலீஸ் தேதி அறிவிப்பு! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் புதிய அப்டேட்! | சூர்யா 46வது படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடியா? | கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் - வெள்ளிவிழா ஆண்டில் ரீரிலீஸ் அறிவிப்பு | பிளாஷ்பேக்: இயக்குநர் பி ஆர் பந்துலுவின் 'டூப்'பாக சாண்டோ சின்னப்ப தேவர் நடித்த “திலோத்தமா” | மோகன்லால் தான் எனக்கு எல்லாமே ; 'தொடரும்' பட வில்லன் நெகிழ்ச்சி |
யதார்த்த நடிப்பால் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகை சாந்தினி தமிழரசன். 'சினிமாவிற்குள் புதிதாக வருபவர்களுக்கு பொறுமை மிக முக்கியம். நம்பிக்கையுடன் திறமையை வளர்த்து கொள்ள வேண்டும்,' என்று சொல்கிறார் பள்ளியில் படிக்கும் காலத்திலேயே நடிகையான சாந்தினி.
அவர் நம்முடன் பகிர்ந்தது...
பிறந்து வளர்ந்தது சென்னை. பள்ளி படிக்கும் போது மிஸ் சென்னை போட்டியில் பங்கேற்றது தொலைக்காட்சியில் வெளியானது. இதன் மூலம் 'சித்து + 2' படத்தில் இயக்குனர் பாக்கியராஜ் கதாநாயகி வாய்ப்பு வழங்கினார். அப்போது பள்ளி பருவம் என்பதால் மேக்கப் போடுவது, கேமரா முன் நிற்பது, நடிப்பது எதுவும் தெரியாமலும், சூட்டிங் ஸ்பாட் அனுபவம் புதிதாகவும், பயமாகவும் இருந்தது. அடுத்தடுத்த படங்களில் திறமையை வளர்த்து கொண்டதால் எளிதாக மாறியது.
புதிய படைப்புகளில் இருந்த ஆர்வத்தால் கல்லுாரியில் விஷூவல் கம்யூனிகேஷன் சேர்ந்தேன். அடுத்தடுத்து வந்த பட வாய்ப்புகளால் படிப்பு பாழாகி விடக்கூடாது என்பதற்காக 4 ஆண்டுகள் எந்த படத்திலும் நடிக்கவில்லை.அதன் பின் 'நான் ராஜாவாகப் போகிறேன்' படத்தில் மீண்டும் கதாநாயகியாக நடித்தேன். சினிமாவில் தொடர்ந்து நடிக்க, நிறைய சம்பாதிக்க வேண்டும் என அப்போது தோன்றவில்லை.
இதனால் ஒரு படம் வெளியான பின்பு அடுத்த படத்தை தேர்வு செய்ததால் ஒவ்வொரு படத்திற்கும் இடையே நடிக்க அதிக இடைவெளி ஏற்பட்டது.
'வில் அம்பு' படத்தில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக நடித்தேன். இப்படம் நல்ல வரவேற்பு பெற்றதால் அதிக வாய்ப்புகள் வந்தது. கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தியதால் சினிமாவில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்ற விருப்பம் உருவானது.
பள்ளியில் உடன் பயின்ற நண்பரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்தேன். தமிழ், தெலுங்கு சினிமாவில் 50 படங்களில் கதாநாயகியாகவும், 10 படங்களில் முன்னணி கதாபாத்திரத்திலும் நடித்துள்ளேன். 'சுழல் 2'என்ற வெப்சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தேன்.
தற்போது வெளியான 'பெருசு' படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படம் துவங்கும் போது ஒருவர் அணிந்த ஆடை படம் முடியும் வரை மாற்றப்படாமல் படமாக்கப்பட்டது.
ஒவ்வொருவருக்கும் ஒரே மாதிரி 3 செட் ஆடைகள் வழங்கப்பட்டது. ஷூட்டிங் 27 நாட்களில் முடிந்தது. அதிக ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்கள் இருந்ததால் ஷூட்டிங் ஜாலியாக சென்றது.
10 படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறேன். அதில் ஒரு படத்தில் கண் தெரியாத பெண்ணாக நடித்துள்ளேன். மற்றொரு படத்தில் ஆசிரியர் என ஒவ்வொரு படத்திலும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிப்பது நன்றாக உள்ளது. நடிகருக்கு இணையான முக்கியத்துவம் உள்ள படம், நல்ல காதல் கதை படங்களில் நடிக்க வேண்டும் என விருப்பம் உள்ளது என்றார்.